உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பிய நூற்பாக்கட்கு மூலம் போற் காட்டியிருக் கின்றார். தொல்காப்பியர் காலம் கி. மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு. அகத்தியர் காலம் தோரா. கி.மு. 12ஆம் நூற்றாண்டு. அவர் பழந்தமிழ் நூல்களைப் பயின்றே அகத்தியம் இயற்றினார். அவர் வேதக்காலத்தவராதலின், அவர் பயின்ற பழந்தமிழ் நூல்கள் வட நாட்டுத் தமிழரிடையும் வழங்கியிருத்தல் வேண்டும்.

பிராதிசாக்கியம் என்பது, ஒவ்வொரு வேதசாகைக்கும் (கிளைக்கும்) ஏற்பட்ட தனி எழுத்திலக்கணம். அது கி.மு. 10ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம்.

உரிச்சொற்றொகுதி யொத்த நிருக்தத்தின் ஆசிரியர் யாசுக்கர் பாணினிக்கு முந்தியவர். அவர் காலம் கி.மு. 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு. வடமொழி தமிழின் பன்மடித் திரிமொழி என்பதை யறியாது, அவர் வடசொற்கட்குத் தாமாகவும் பிறரைப் பின்பற்றியும் வடமொழி யுள்ளேயே மூலம் நாடிப் பலவிடத்தும் வழுவியுள்ளார்.

6T-(b -டு : agni: `It is derived from three verbs, says Sakapūni from going, from shining or burning, and from leading, He, indeed, takes the letter a from the root (to go), the letter g from the root anj (to shine), dah (to burn), with the root ni (to lead) as the last member. - (The Nighantu & the Nirukta, translated by Lakshman Sarup, p.120).

சொல்லின் உண்மையான மூலம் வருமாறு:-

அழல்-அழன் -அழனம்

=

b (பிங்.)

அழல்-அழலி = நெருப்பு, தீ (பிங்.)

அழலி-அழனி-(அகனி)-வ. அக்நி (agni)-L. ignis. ழ-க,போலி. ஒ.நோ: மழ-மக, தொழு-தொகு, முழை-முகை.

வடமொழியில் முதன்முதலாகத் தோன்றியது சிட்சை என்னும் எழுத்திலக்கணமே. அதன் பின்னரே, எழுத்துஞ் சொல்லும் பற்றிய நன்னூல் போன்ற இலக்கணங்கள் எழுந்தன. அவற்றுள் முதலது, தமிழகத்திற் பழந்தமிழிலக்கணத்தையும் அகத்தியத்தையும் பின்பற்றித் தோன்றிய ஐந்திரம். அதன் பின்னர் அதன் வளர்ச்சியாக ஏறத்தாழ 60 இலக்கண நூல்கள் எழுந்தபின் பாணினீயம் கிளர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாணினியாரே தம் நூலில் சாகல்யர், சாகடாயனர்

முன்னூலாசிரியரைக் குறிக்கின்றார்.

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென்

முதலிய

சில