உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

233

தால்

பனுவல் வகைகள் இன்று 96-ற்கு மேற்பட்டுள்ளன. இனியும் மேன்மேலும் புதுவகைகள் தோன்றலாம். காப்பியத்திற்குப் பிந்தியவை யெல்லாம் விருந்து என்னும் வனப்புள் அடங்கும். ஆதலால், இற்றைத் தமிழ்ப் பனுவல் தொகுதியின் இரட்டைப் பகுப்பைப் பெருவனப்பு (அல்லது பெரும்பாவியம்). சிறுவனப்பு (அல்லது சிறுபாவியம்) என்று சொல்லுதல் வேண்டும்.

தமிழ்நூற் பொருட்பகுப்பு

99

(நன். பாயி.10)

மொழித்திறத்தின்

(பழம் பாட்டு)

“அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே "எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறும்பா னாகும் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்.

இதுவே அறநூற் பாகுபாடு.

-

இன்பத்தை அகம் என்றும், ஏனை மூன்றையும் புறம் என்றும், பொருள்களை ள இரண்டாகப் பகுப்பது பொருளி லக்கணப் பாகுபாடு.

அறவழியிற் பொருளீட்டி, அப் பொருளைக் கொண்டு அறவழியில் இன்பந் துய்த்தல் என்பதே தமிழர் இல்வாழ்க்கை நெறி. இது “மூன்றன் பகுதி” எனப்படும். (தொல். அகத். 41)

ஆரிய வொழுங்கில், அறம் என்பது வருணாசிரமம் என்னும் குலவொழுக்கமேயன்றி நல்வினையன்று. மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்பனபற்றி ஆரியர் என்பதெல் லாம் ஆரியப் பூசாரியரையே யாதலால், பொருளீட்டலும் அறஞ்செய்தலும் அவர் அவர் தொழிலன்று. அவர் முதற்கண் கடவுளல்லாத தய்வ வழிபாட்டினரே யாதலால், மறுமையில் விண்ணுலகப் பேறேயன்றி வீடுபேறு அவர்க் கில்லை. ஆதலால் தர்மார்த்த காமமோக்ஷம் என்பது, அறம் பொருளின்பம் வீடு என்பதன் மொழிபெயர்ப்பே.

சிறு

இசை நாடகப் பெயர்கள்

சை, இன்னிசை

தமிழ்

தமிழிசை, (இசைத்தமிழ்)

நடம், தமிழ் நடம்

ஆரியம்

சங்கீதம்

கர்நாடக சங்கீதம் பரதநாட்டியம்.

புதிதாய்த் தோன்றிய வடசொற் குறியீடுகளை மொழி

பெயர்த்தல் வேண்டும்.