உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

மதுரம், சித்திரம் என்பனவும் தென்சொற்களே.

நால்வகைப் புலவர்

235

கவி-பாவலன், கமகன்-விளக்கி, வாதி-தருக்கி, வாக்கி- பொருண்மொழியன்.

கடவுள் வணக்கம்

தமிழ முறைப்படி, சிவனியர் சிவன் என்னும்பெயராலும், மாலியர் திருமால் என்னும் பெயராலும், ஒரே கடவுள் வணக்கஞ் செய்தல் வேண்டும். ஆயின், ஆரியச்சார்பினால், பெரும்புலவரான தமிழத் துறவியரும் தம் நூல்களிலும் பனுவல்களிலும் பல்தெய்வ வழுத்துப் பாடிவருகின்றனர். திரு என்னும் அடைமொழி

திரு = செல்வம், அழகு, செல்வத்தெய்வம், தெய்வத் தன்மை, தெய்வத் தூய்மை. இத் தூய தென்சொல்லை வடவர் ச்ரீ என்று திரித்து ஸ்ரீ என்று குறித்து வடசொல் போலாக்கி, இருவகை வழக்கிலும் திருப்பொருட் பெயர்கட்குமுன் அடை மொழியாக வழங்கச் செய்திருக்கின்றனர். அது சீ யென்று சிதைந்து முள்ளது. எ-டு: திருவரங்கம்-ஸ்ரீரங்கம்-சீரங்கம். இங்ஙனம் மாற்றப்பட்ட சொற்கள் எத்தனையோ உள.

ஓம் என்னும் முழுமூலக் குறியெழுத்து மந்திரம்

இது தமிழரது என்பது, அதன் வரிவடிவே காட்டும். இது பகுக்கப் படாதது. ஆயின், ஆரியப் பூசாரியர் அ + உ + ம் என்று பகுத்துப் பிரணவ என்று பெயரிட்டு ஆரிய மந்திர அசை மொழியாகக் காட்டுவர்.

"ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்

ஓங்காரா தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே"

(திருமந். 2628)

இது ஓம் என்பது அனைத்திற்கும் மூலம் என்பதை உணர்த்துதல் காண்க. இதன் மருமப் பொருளைத் தமிழ் வாயிலாகவன்றி வேறெம் மொழி வாயிலாகவும் உணர வியலாது. மறைநூல்

மந்திரம் என்றும் வாய்மொழி என்றும் இருந்த தமிழமறை நூல் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆரிய நான்மறைகளே