முன்னுரை
9
குருகு, குரகம் - OHG., OS. krano, OE. cran, E. crane. -
குருள் - LG, Du. OFris. krul, G. krol, OE. crol, crul, E. crul.
குலவு -L.curvus, E. curve.
குளியம், குழியம், கோளம் - L. globus, E. globe.
காக்கி - Du. hock, MLG. hok, OE. hoc, E. hook.
கொடுக்கு - ON. krokr, F. croc, ME. croc, E. crook. கோணம் - Gk. gonia.
இத்தகைய சொற்கள் மேலையாரியத்தில் அயல்நாடு சென்ற தனி மக்கள்போல் தனிப்பிரிந்தே நிற்றல் காண்க. தமிழ்ச்சொற்கள் குடும்பங் குடும்பமாகவும் குலங்குலமாகவும் தொடர்புகொண் டிருப்பது போன்ற நிலைமை, வேறெம் மொழியிலுங் காண்டற் கரிது.
ஆங்கில மொழிவரலாறு எங்ஙனம் ஆங்கிலநாட்டு வரலாற் றொடு இரண்டறக் கலந்துள்ளதோ, அங்ஙனமே தென்மொழி வரலாறும் தென்னாடு அல்லது குமரிநாட்டு வரலாற்றொடு இரண்டறக் கலந்துள்ளதென அறிக.
மேற்காட்டிய தமிழ்ச்சொற்களுட் சில வடசொற்கள்போல் தோன்றலாம். அவை அங்ஙனமன்மை இந் நூல் முழுதும் படிப் பார்க்குத் தெற்றெனத் தெரிந்துவிடும்.
ந்
கிரேக்க மொழியிற் சில தமிழ்ச்சொற்க ளிருப்பது கொண்டு, கிரேக்க நாட்டினின்று தமிழர் வந்தாரென்பது, ஒரு மரத்தினின்று பறிக்கப்பட்டு வேறிடத்திலுள்ள சில இலைகளினின்றே அம் மரந் தோன்றிற்றென்பதை யொக்கும்.
இதனால், தமிழின் பிறந்தகம் குமரிநாடென்பதை அறியா தார், தமிழ்மொழியை ஆழ்ந்தாராயாதார் வெள்ளிடை மலையாம்.
என்பது
இனி, உல் என்னும் முதலடியும், குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் வழியடிகளும், எவ்வாறு ஒரே அடிப்படைக் கருத்துப் பற்றிப் பல்வேறு சொற்களைப் பிறப்பிக்கின்றன என்பதை, பின்வரும் எடுத்துக்காட்டால் அறிந்து கொள்க.
குத்தல் அல்லது கிள்ளுதல்
குத்தற்கு அல்லது கிள்ளுதற்குக் கூரிய உறுப்பு அல்லது கருவி வேண்டும். உல் என்னும் லகர வீற்றடி, பிற்காலத்தில் உள் என்னும் ளகர வீற்றடியாகத் திரிந்துள்ளது. இங்ஙனமே ஏனையவும்.