உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

33


பெயர் மாறிய தெய்வம்

.CO. (F.J.). WILDGÖT (WILD); Gk.plouton, E pluto.

யமன் இறந்தோர் போய்ச் சேரும் கீழுலகத் தலைவன். இறந்த வுயிர்கள் கடக்கும் வழியில், நாற்கண்ணும் அகன்ற மூக்குத் துளையு முள்ள (யமனுடைய) ரு கொடிய நாய்கள் உள்ளன. வேத ஆரியர்

கொள்கை.

-

புளூட்டோ இறந்த வுயிர்கள் சென்றடையும் (Hades என்னும்) கீழுலகத் தலைவன். முத்தலையுள்ள கெர்பெரோசு (Gk. kerberos, E. cerberus) என்னும் நாய் கீழுலக வாயிலைக் காக்கின்றது. - கிரேக்கர் கொள்கை.

உஷஸ் என்னும் விடியல் தெய்வம் ஈயோஸ் (Eos) என்னும் கிரேக்கத் தெய்வத்தையும் ஔரோரா (Aurora) என்னும் உரோமத் தெய்வத்தையும் ஒத்தது.

(2) எல்லா வேதத் தெய்வங்களும் சிறு தெய்வங்களே. இது நூலில் விளக்கப்பெறும்.

(3)

பல தெய்வங்கள் இன்றும் தமிழர் கேட்டறியாதவை. எ-டு : மித்ரா, பூஷன், உஷாஸ், அஸ்வினிகள், ரிபுக்கள், பிரஜாபதி.

(4) சில தெய்வங்கள் பழந்தமிழ்த் தெய்வங்களே.

எ-டு : மேனாடு சென்றது.

வாரணன் - Gk. Ouranos, இ.வே.வருணா.

இந் நாட்டிலிருந்தது:

இந்திரன் - இந்த்ரா. வேந்தன் என்னும் மருதநிலத் தெய்வப் பெயரே வடநாட்டில் இந்திரன் என்று மொழிபெயர்ந்து வழங்கி வந்தது. கடைக்கழகக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் கொண் டாடப் பெற்று வந்தது வேந்தன் விழாவே.

(5) சில தெய்வங்களின் நிலைமை காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கின்றது.

(6)

எ-டு:

த்யெஸ் (வானம்), வருணா, இந்த்ரா, அக்னி, ருத்ரா என்னும் தெய்வங்கள், வெவ்வேறு காலத்தில் மண்ணுலக அரசர்போல் தலைமைபெற்று வந்திருக்கின்றன.

சில தெய்வங்கள் ஒன்றோடொன்று மயக்கத் தக்கனவா யுள்ளன.