மொழியதிகாரம்
85
"அண்ணலோர் விருத்தன்போல் வந்தவண வோலை காட்டி
"9
(கந்தபு.வழிநடை. 12)
ஆவணமாக்கள் வாங்குவோர்.
=
உரிமை அல்லது கடமைச்
சூள்
"பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்
22
(அகம். 77)
ஆளத்தி - ஆலப்தி (ஆ + லப்தி)
-
ஆலத்தி ஆளத்தி
= ஒரு பண்ணை வலிவு மெலிவு சமன் என்னும் முந்நிலையுந் தழுவ மண்டலித்துப் பாடுதல் அல்லது இசைத்தல்.
ஆலத்தி சுற்றுதல் கட்புலனும், ஆளத்தி சுற்றுதல் செவிப் புலனும் ஆகும்.
லப் என்னும் வடசொற்கு, அலப்புதல், பிதற்றுதல், புலம்பல், விளித்தல், சொல்லுதல் என்ற பொருள்களே உள. ஆளத்தி என்னும் தமிழ்ச்சொற் கொப்பாக, ஆ -லப் என்னும் புனைசொல்லினின்று ஆ ஆலாப, ஆலாபன முதலிய சொற்களைத் திரித்திருப்பதாகத் தெரிகின்றது.
இகம் - இஹ
-
வே.)
இகு - இகம் = இவ்வுலகம். இகு - இங்கு - இங்கண்.
முச்சுட்டும் முதலில் தமிழிலேயே தோன்றினவென்பது பின்னர் விளக்கப்பெறும்.
இசி - ஹஸ்
இளித்தல்: = பல்லைக் காட்டுதல், சிரித்தல். இளி = சிரிப்பு (பிங்.) இளி -இசி. இசித்தல் = சிரித்தல்.
ஹாஸ்ய ரஸ = நகைச்சுவை.
இஞ்சிவேர்
சி
ச்ருங்கவேர
இஞ்சி என்பது தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைந்து வரும் மருந்துப் பூண்டு.
"செய்யாப் பாவை வளர்ந்து கவின்முற்றிக்
காயங் கொண்டன இஞ்சி”
"இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டி"
"மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து"
இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சு - இஞ்சி. இஞ்சி காய்ந்தாற் சுக்கு. சுக்கு= நீர்வற்றியது.
(மலைபடு.125-6)
(பதிற். 42:10)
(சிலப்.10:74)