136
வடமொழி வரலாறு
அறிவின்மை என்று முறையே பொருள் வளர்ப்பர். அறிஞர் இதன் பொருந்தாமையை அறிந்துகொள்க.
குளிர்மைப் பொருளில் ஜட என்பது சளி என்னும் தென்சொல்
திரிபாக இருக்கலாம்.
சடம் = சடலம் = உடம்பு. இது உலக வழக்கு. ஒ.நோ: படம் - படலம்.
சடலம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.
சடலம் - சதரம்
= உடம்பு (நெல்லை வழக்கு).
சதரம் - சதிரம் (கொச்சைத் திரிபு).
சடை
—
ஜடா (t)
சள்ளுதல் - சிக்குதல்.
சழிதல் = நெருங்குதல், அடர்தல், நெருங்கிக் கிடத்தல்.
"திங்கட் டொல்லரா சழிந்த சென்னி'
"2
சடாய்த்தல் = செழித்தல், அடர்ந்து வளர்தல்.
சடைத்தல் = அடர்ந்து கிளைத்தல்.
சடாய்
-
(தேவா. 980:6)
சடை = கற்றை, இயற்கையான மயிர்க்கற்றை,
கற்றையான. சடைப்பின்னல். சடை = சடாய்.
சடைச்சம்பா, சடைச்சாமை, சடைப்பயறு, சடைப்பருத்தி, சடையவரை என்பன, கற்றையான அல்லது கொத்தான பொருள்களை உணர்த்தும். சடைமுடி, சடை விழுதல், சடையாண்டி, சடையன் என்னும் சொற்களில், சடை என்பது இயற்கையாகவோ எண்ணெய் தேய்க்காமையாலோ ஏற்படும் மயிர்க்கற்றையைக் குறிக்கும்.
வடவர் ஜட்j, jh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சிக்கற் பொருளை யுணர்த்துதலால் சடாய் என்பதன் திரிபே.
சடாய்
-
ஜட்
சண்டம் சண்ட (C)
-
சள்ளெனல் = சினந்து விழுதல். சள் = தொந்தரவு.
சள்ளை = தொந்தரவு. சள் - சண்டு - சண்டை =
சச்சரவு.
சளம் = கடுஞ்சினம். சண்டு - சண்டம் = 1. சினம் 2. கொடுமை.
“சண்ட மன்னனைத் தாடொழுது” (சீவக. 430).
சண்டன் = கடுஞ்சினத்தன், கூற்றுவன், கதிரவன், கொடியவன்.