உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

வடமொழி வரலாறு


கட்டுடம்பின் அமைப்பைச் சதுர்க்கட்டு என்பது உலக வழக்கு. ஆங்கிலத்திலும் square - built, a man of square frame என்று வழங்குதல்

காண்க.

சடலம், சதரம் என்னும் சொல் வடிவங்கள் குமரிக் கண்டத்தில் சட்டக் கருத்தும் உணர்த்தியிருத்தல் வேண்டும்.

சதுர என்னும் பெயரினின்று தோன்றிய சதுரி என்னும் வினை டமொழியிலில்லை.

சதுரித்தல் = நாற்கோணமாக்குதல்.

குழித்தல் (வருக்கமாக்குதல்). சரியான சதுரத்தைக் குறிக்கும் சச்சதுரம் என்னும் இரட்டித்த வடிவம் வடமொழியிலில்லை. சந்து – ஸந்தி (இ.வே.)

இது முன்னரே விளக்கப்பெற்றது.

உம் - அம் - அந்து - சந்து = பொருத்து, கூட்டு.

வடமொழியில் ஸம் + தா (dhā) என்று பிரித்து, உடன்வை, பொருத்து என்று பொருளுரைப்பர். ஸம் = கூட. தா = வை, டு.

சப்பட்டை

சர்ப்பட்ட (c)

சப்பை - சப்பட்டை.

சப்பாணி சப்பேட்ட (c)

-

சப்பு சப்பாணி = விரித்த கைகளைச் சேர்த்துத் தட்டுதல்.

-

'சப்பாணி கொட்டியருளே'

தெ.சப்படலு.

சவை சபா (s,bh)

இது முன்னர்க் கூறப்பட்டது.

சமம் ஸம் =

சமரம்

ஒப்பு.

(மீனாட். பிள்ளைத். சப்பாணி, 1)

உம் -அம்சம் - சமம் = ஒப்பு. சமம் - சமன் = ஒப்பு, நடுநிலை. ஸமர் = போர்.

-

இருவர் அல்லது இரு படைகள் போர் செய்யும்போது ஒன்று கலத்தலால், கலத்தல் அல்லது ஒன்றாதற் கருத்தினின்று போர்க் கருத்துப் பிறந்தது.