இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
99
"மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தி.பி.1933 (1902)
தந்தை தாய்
தி.பி. 1938 (1907)
வாழ்க்கைச் சுவடுகள்
- திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் -26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார்.
- ஞானமுத்து
- பரிபூரணம்
- வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி
தொடக்கக் கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்
பள்ளி,
உயர்நிலைக் கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11
-
வகுப்பு)
தி.பி.1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார்.
தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார்.
தி.பி. 1955 (1924)
தி.பி. 1956 (1925)
தி.பி. 1957 (1926)
- மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார். (இவ் வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும் வெற்றி பெறவில்லை). “கிறித்தவக் கீர்த்தனம்" - நூல் வெளியீடு.
உதவித் தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
- தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். “சிறுவர் பாடல் திரட்டு" நூல் வெளியீடு.
- திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.