138
வடமொழி வரலாறு
வேதகாலச் சூரசேனியிலும் மத்து என்றே இருந்திருக்கலாம்.
மத்து-மத்-மா(வ.) Gk. mē.
மா பை: (bh) = அஞ்சாதே.
வடமொழியில், த்வித்வலிட் என்னும் சேய்மை யிறந்தகால வினையும் ஸன் என்னும் ஆர்வ வினையும் முதனிலை யிரட்டித்தல், சில தமிழ் இறந்தகால வினைகள் முதனிலை யிறுதி வலி இரட்டிப்பதை யொத்தது. கிரேக்க மொழியிலும் இத்தகைய இரட்டிப்புண்டு.
வடமொழி திரிமொழியாதலின், அதன் வினைகட்கு வேர்ச் சொற்கள் அம் மொழியிலில்லை. அவை பெரும்பாலும் இயன் மொழியாகிய தமிழில்தான் உள்ளன. ஆயினும், வடமொழி தேவ மொழி யென்னும் ஏமாற்றிற்கேற்ப, வடமொழி வினைச் சொற்களின் முதனிலைகளையும் (Themes) அடிகளையும் (Stems) வேர்களாகக் (Roots) காட்டியுள்ளனர். மேனாட்டாரும், தமிழை வரலாற்று முறைப்படி வடமொழியை இயன்மொழியென்றும் ஆரியத் தாய்மொழியென்றும் மயங்கி, வடவர் காட்டியுள்ள போலி வேர்ச்சொற்களை உண்மையான வேர்ச்சொற்களென்றே நம்பியிருக்கின்றனர்.
ஆராயாமையால்,
வடவர் காட்டியுள்ள தாதுக்கள் (வேர்ச்சொற்கள்) ஏறத்தாழ 1750. அவை எங்ஙனம் தவறானவை என்பது, இங்கு ஐந்தாதுக்களால் எடுத்துக் காட்டப்பெறும்.
கீர்த்
சீர் = சிறப்பு, புகழ். சீர்-சீர்த்தி = பெரும்புகழ்.
=
"சீர்த்தி மிகுபுகழ்” (தொல்.796).
சீர்த்தி-கீர்த்தி. ச-க. ஒ. நோ: செய்-(கெய்)-கை, செம்பு-கெம்பு. சேரலம் - கேரளம், சேது-கேது.
சீர் என்னும் முதனிலையும், ‘தி” என்னும் ஈறும், 'த்' ஆகிய புணர்ச்சித் தோன்றலும் கொண்ட சீர்த்தி என்னும் தொழிற் பெயரின் (அல்லது தொழிலாகு பெயரின்) முற்பகுதித் திரிபாகிய கீர்த் என்பதை முதனிலையாகக் கொள்வது எத்துணை இயற்கைக்கு மாறானது! வடமொழி நூன்மொழியே யாதலால், அதில் எச்சொல் வடிவையும் எப்பொருளிலும் ஆளலாம்.
கீர்த்தி என்பதனோடு நேர்த்தி என்பதனை ஒப்பு நோக்குக.
இனி, இதற்கு வேராக, க்ரு என்பதைப் பாணினியார் (3:3:97) குறித்துள்ளார். அது கரை என்னும் தென்சொல்லின் திரிபே.