32
இளங்குமரனார் தமிழ்வளம் 9
தமிழ் நாடும் தலைதூக்கி நடக்கத் தக்க தகவினைப் படைத்தார்; தென்னாட்டுக் காந்தியாக, இலக்கிய வாழ்வாக, தெய்வத் திருத் தொண்டராகத் திகழ்ந்தார்!
திரு. வி. க. வினால் தந்தையார் பெற்ற நலமும், இன்பமும் பெரிதா? தரணி பெற்ற நலமும் இன்பமும் பெரிதா? ஆயிரத்தில் ஒரு கூறுகூட, தந்தையார் பெற்றது இல்லை!
காந்தியார் பிறந்தார்; காபா காந்தியும் புத்திலிபாய் அம்மையும் பேறு பெற்றனர். வாய்மை போற்றும் மைந்தனைக் கண்டு பெற்றோர் இன்புற்றனர்; அரசியல் தலைமை நடாத்தும் அருஞ்செயல் கண்டு சுற்றமும் நட்பும் இன்புற்றன. ஆனால் அவர்களினும் மேம்பட்ட ஏன்-உலகர்!
-
ன்பம் எய்தியவர் எவர்? இந்தியர்-
காந்தியடிகள் வழிகாட்டுதலால் - கோடி கோடியாக முன் வந்த தேயத் தொண்டர்களுக்குத் திருந்திய வழிகாட்டி ஈர்த்துச் சென்றதால் உரிமை எய்தினோம்; அடிமை நீங்கினோம்; மனிதராக வாழும் பேறு பெற்றோம்; இந்தியக் கண்டத்து வாழ்வாரும் மாந்தர்தாம்; உணர்வு உடையவர்தாம் என்று அடிமையாக்கி வைத்திருந்த அயலோரும் மதிக்கும் மாண்பு எய்தினோம். எல்லாவற்றினும் மேலாக உலக மன்றில் தலை நிமிர்ந்து நடக்கும் வாய்ப்புப் பெற்றோம், பட்டி தொட்டிகளில் வாழ்வோனது மூச்சும் பாராள்வோரை அசைக்கும் அளவுக்குப் பெருமையும், உரிமையும் பெற்றது. மறப்போர் வன்கொடுமை சேற்றில் மாறி மாறி நடந்து கொண்டிருந்த வெறியாளர்களுக்கும், அன்பு வழியால் துன்புறுத்தாக் கொள்கையால் உலகை வெல்லும் அறப்போர் நெறி இருப்பது புலனாயிற்று. அமைதி நாடுவோர் இதயத்தெல்லாம், அருள் நெஞ்சர் நினைவிலெல்லாம் அண்ணல் காந்தியார் உறைகின்றார். அவரால் பெற்றோர் பெற்ற இன்பம் மிகுதியா? சுற்றம் எய்திய பெருமை மிகுதியா? உலகம் பெற்ற பேறு பெரிதா?
நீராவியாற்றலைக் கண்டு, நெறிப்படுத்தி எத்துணை எத்துணையோ நற்காரியங்களைச் சாதிக்கும் வழியைத் தர எடிசனாரால் முடிந்தது.
நீராவி ஆற்றலால் இயங்கும் புகைவண்டியினைப் புவிக்குத் தந்து புதுநலங் கனிவித்த பெருந்தகைமை இஃச்டீவன்சனார்க்கு உண்டு.