உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

உண்பது எங்கள் உவகைக்காக அன்று; விருந்தினர் உவப் படைவதற்காக என்கின்றனர்.

ஒருவர் சொன்னார்:-

“எனக்கு ஒருவகை நாள் வரக்கூடாது”.

"எவ்வகை நாள்?” என்று கேட்டார் அடுத்தவர். பதில் உரைத்தார் அவர்:

நாள்.”

'விருந்தாளி இல்லாமல் யானே தனித்து உண்ணக் கூடிய

போர்ப் புண்படாத நாட்களெல்லாம் புல்லிய நாட்கள் என்றுரைக்கும் வீரனுக்கு இணையானவர் அல்லரோ இவ் விருந்து வேட்கையர்?

விருந்தாளிகளை வரவேற்பதிலும், இனிய உரையாடுதலிலும், விருந்து செய்தலிலும் பேரின்பம் காணும் பெருநோக்கத்தை பண்டுதொட்டே வழி வழியாகப் பெற்று வளர்சிறப்பு அடைந்தது தமிழகம்! “படையாமல் உண்ணாத தமிழ்நாடு” என்ற பாராட்டும் அளவுக்குப் பண்பாட்டில் ஓங்குவது தமிழகம்! தமிழனின் தனிப் பண்புகள் இவையென விரல்விட்டு எண்ணினால் அவற்றுள் முன்னாக ஓடிவந்து நிற்பது விருந்தோம்பல் என்றால் மிகை யாகாது.

விருந்தினரைப் பேணும் வாழ்வு "விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்வு" என்று பெரியயோர்களால் பேசப்படும்.

விருந்தினர்களைக் கண்டு அவர்களுக்கு உதவ முடியாமல், அவர்களுக்கு உதவாமல் இருக்க மனமும் இல்லாமல் வருந்தும் வறுமை வாழ்வு "விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்வு என்று இகழப்படும்.

66

உண்டிக் கழுகு விருந்தோடு உண்டல்" என்றும், "வேளாளன் (உழவன்) என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்றும் உணவுச்சிறப்பும், உணவளிக்கும் உழவன் சிறப்பும் உயர்த்து உரைக்கப் படும்.

அறிந்துவரும் விருந்தினர்களும் இருப்பர்; அறியாது வரும் விருந்தினர்களும் இருப்பர்; என்றாலும் விருந்து என்பதற்குப் புதிது என்றும், விருந்தினர் என்பதற்குப் புதியர் என்றுமே பொருள்.எத்துணை முறை வந்தாலும் சரி, பன்முறை பழகி வந்தாலும் சரி அவர்களையெல்லாம் புதியராக எண்ணிப்