இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
47
ருக்க
அது என்பதை உணர்ந்து விட்டால் அவன் பன்னீர் அதனைத் தெளிக்காமல் சாணநீர் தெளிக்க நினைவானா? இன்சொல் தெளிப்பவன் இன்சொல் பெறுகிறான்; வன்சொல் தெளிப்பவன் வன்சொல்லே பெறுகிறான்.
“விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா?” “தினை விதைத்தவன் தினை யறுப்பான்" என்பவை பழமொழிகள்.
வாழ்வியலை நன்கறிந்த சங்கப்புலவர் கணியன் பூங் குன்றனார் நன்மை ஆகட்டும், தீமையாகட்டும் அவை நமக்குப் பிறர்தர வருவன அல்ல; நாமே ஆக்கிக் கொள்வன என்று பொது நெறி காட்டினார். வள்ளுவரோ, "இனிய சொற்கள் நம்மிடம் இயல்பாய் இருக்க அதனை விடுத்து, இன்னாத சொற்களைச் சொல்வது கனி இருக்கக் காய் கவர்ந்து கொண்டதற்கு இணையாகும்” என்று சிறப்பு நெறி காட்டினார்.
66
"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”