66
11. இழிவும் உயர்வும்
'நாய்' என்றால் நண்பன் எனினும் தாங்கமாட்டான். 'நாய் போன்றவன்' என்றால் உயிர் அன்பனாக இருந்தாலும் வெறுப்பான். கைவிரலைச் சுடக்கிட்டுக் காட்டிக் கூப்பிட்டாலே போதும் சண்டைகள் கிளைத்துவிடும் ‘என்னை நாயென்றா கருதினை' என்று. "ஏன் ஐயா! மெதுவாகப் பேசு'மே; என்ன சொல்லி விட்டேன்; 'வள்ளு வள்ளு' என்று விழுகிறீர்” என்று பெயர் கூறாமல் ஒலிக்குறிப்புக் காட்டினால் போதும், உற்ற உறவினரும் பொறார். சண்டைக்காரர் என்றாலோ என்ன நேரும் என எழுதிக் காட்ட வேண்டியது இல்லை. ஏன்?
நாயின் இழி செயல்களால் நம் உணர்வில் ஏற்பட்டுள்ள எண்ணங்களின் விளைவு. அதே நேரம், 'புலியல்லவா' 'சிங்கக் குட்டிக்கு என்ன' என்று உவமை காட்டிப் பேசினால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏன்? அவ்வுயிர்கள் மேல் நாம் கொண்டிருக்கும் உயர்பாட்டு எண்ணங்களே காரணமாம்.
நாய் பல நல்ல தன்மைகள் கொண்டு இருந்தாலும் ஓரிரண்டு இழிதன்மைகள் உடன் கொண்டுள்ளமையால் அவ்விழி தன்மைகளே நம் முன் நின்று வெறுக்கச் செய்கின்றன. புலி, சிங்கம் பல கொடிய தன்மைகளுக்கு உறைவிடமாக இருந்தாலும் அவை ஓரிரண்டு போற்றும் தன்மைகளைத் தன்னகத்துக் கொண்டிருக்கும் காரணத்தால் அவ்வுயர் தன்மைகளே நம்முன் நின்று விரும்பச் செய்கின்றன.
வயெல்லாம் எண்ணுவோர் எண்ணச் சாயல் அன்றி, எண்ணப்படும் பொருளின் சாயல் இல்லை என்பதை எண்ணிப் பார்த்த எவரும் எளிதில் தெளிவர்.
இழிபாடு உடைய நாய் உயர்வு எய்துவது இல்லையா? உயர்வு எய்துகின்றது; எப்பொழுது?
மெத்தைக் கட்டிலில் படுக்கவைப்பதையோ,
மண
நீர் தெளித்துக் குளிப்பாட்டப் படுவதையோ, உரொட்டித் துண்டுகளையும் அப்ப வகைகளையும் (கேக்) ஊட்டப்