இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
இளங்குமரனார் தமிழ்வளம் – 9
போலும் கொலைஞர்கள் உலகில் உளரோ? அறக்கொலைஞர் இவர்களே! பிற உயிர்க் கொலைஞர் அறிவிலா—அருளிலாக் கொலைஞர்!
வயிற்றுக்கு இல்லை என்று வழியே வருவோரை வாட்டி வதைக்கும் வன்னெஞ்சர்கள் வரினும் மானம் தாழாமல், மனப்போர் தாங்காமல் மாட்டிக்கொல்லும் கொடுங் கொலைஞரினும், உண்ண, உடுக்க, உறைய, தேவைக்கு விஞ்சிய வாய்ப்பு இருந்தும் அரைவயிற்றுக் கஞ்சிக்கும் ஒருமுழத் துணிக்கும் அலமரும் மக்களின் வயிற்றில் மண்ணடித்து மானத்தைச் சுரண்டி வாழும் பொருட் பேராசை பெருநஞ்சக் காலைஞரே புன் கொலைஞர்.