106
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
செய்வான்? வீரனான அவன் வேல் எடுத்துக் கொண்டு போர்க் களம் சென்றான்; பகைவரை வென்றான்; ஆங்குப் பெற்ற பொருள்களால் இரவலர் துன்பம் போக்கி இன்புற்றான். இத்தகைய ஈர்ந்தூரான் உடல் எவ்வாறு காணப் பெற்றது? கண்ணால் காண ஆற்றாத வடுக்களுடன், வெட்டுப் புண்களுடன் தோன்றியது. மருந்து கொள்ளத்தக்க மரத்தில் எத்தனை வெட்டுகள்—கிழிப்புகள்—சிறாய்ப்புகள்! அத்தனையும் ஈர்ந்தூரான் உடலில் இருந்தன. மருந்துமரம் படும்பாடும், பயனும் ஈர்ந்தூர் கிழான் வழியாக விளக்கப் பெறுகிறது அன்றோ!
இலை தழைகளாகத் தோன்றலாம்; அழியலாம்; குப்பையை மூடலாம்; கோபுரத்தில் முளைக்கலாம். ஆனால், மருந்து மரமாகத் தோன்றுதல் எவ்வளவு பேறு! காட்டகத்தே தோன்றிக் கண்ணுக்குத் தெரியாது போயொழியும் மரத்தால் யாருக்குப் பயன்? ஊரகத்தே தோன்றி உயிர்காக்கும் மருந்து மரமாகக் கிளைத்து வளர்வது எத்தகு நலம் பயக்கும்? மருந்து மரமாகத் தோன்றுவது போலும் பிறவிப்பயன் இல்லை. கோவிலகத்தே, புல்லாய் முளைக்க, கல்லாய்க் கிடக்க விரும்பிய அடியார்களும், மருந்து மரமாய் முளைக்கக் கேட்பது சிறக்கும் போலும்!
மனிதனாகப் பிறந்து விட்டபின் மருந்து மரத்தைப் பற்றி நினைத்துப் பயன் என்ன? அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப் பட்டு ஆவது என்ன? என்னும் எண்ணங்கள் கிளைக்கலாம். நம் வாழ்வை மருந்து மரம்போல் பயன்படுத்தி விட்டால் போதும். நாம் மருந்தாகப் பயன் படலாம்; நாம் தேடும் செல்வத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம். அவ்வளவு போதும். எப்படி மருந்தாகப் பயன்படுவது? பயன்படுத்துவது? மருந்து போல் பிறர் துயர் துடைத்தற்குத்தான் வாழ்தல் வேண்டும்.
-
செல்வம் தேடுகிறோம்; அச்செல்வத்தைப் பிறர் பசித்துயர் தீர்க்க, வறுமைப்பிணி அகற்ற, கல்வியின்மை போக்க பயன் படுத்தினால், அதாவது அற நிலையங்களும், மருத்துவ நிலையங்களும், கல்வி நிலையங்களும் அமைக்கப்பயன்படுத்தினால் அச்செல்வம் மருந்து மரம் ஆகாதா?
நம் பொருட் செல்வம் மட்டும்தான் பிறருக்குப் பயன் படுகிறதா? வேறு செல்வங்கள் இல்லையா? அவற்றைப் பயன் படுத்துவதும் மருந்து மரமே!
தம் பொருளாகத் தம்மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊருக்கு உழைக்க, உயர்ந்த கண்டு பிடிப்புக்கள் செய்ய, அறத்