திருக்குறள் கட்டுரைகள்
179
"நிறுக்கவா? நாங்கள்
கொண்டு வந்தவற்றை ஏன்
நிறுக்க வேண்டும்?"
66
இல்லை! இல்லை!
இங்கிருந்தவை அவை. நான்
எடுத்துத் தந்தவை.”
66
நாங்கள்
கொண்டு
வந்தவை அவை; இங்கிருந்
தவை அல்ல”
"இல்லவே இல்லை; கீழே
வையுங்கள்”
“உனக்கு என்ன மூளைக்
கோளாறா? நாங்கள் கொண்டு
வந்தவற்றைக் கொள்ளை
அடிக்கப் பார்க்கிறாயா?"
பணியாளுக்கு கோபம் வந்து விட்டது.
"மரியாதையாகக் கீழே வையுங்கள்;
பறிக்க வேண்டியதிருக்கும்."
ல்லையேல்
"பறிப்பாயா? அப்படி செய்தால் நீ என்ன ஆவாய்?'
பேச்சு நீண்டு ஒன்றை மீறி ஒன்றாய் வளர்ந்தது. குரலும் ஓங்கியது. கடை முதலாளி வந்தார். முடிவு ஏற்படுவதாக இல்லை. உடனே காவல் நிலையத்திற்குத் தொலைபேசியில் பேசப் போவதாகக் கூறினார். அதற்கும் அஞ்சவில்லை. மங்கையர். "காவல்காரர்களை அழையுங்கள்; யார் திருடர் என்பதை உறுதி செய்து விடுவோம்" என்றனர்.
கடைக்காரர் தொலைபேசியில் பேசினார். சில நிமிடங்களில் ஒரு வண்டியில் காவலர் நால்வர் வந்து இறங்கினர். திருட்டுப் பெண்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, கடைக்காரரை அவர் வண்டியில் வந்து சேருமாறு கட்டளையிட்டு விரைந்தனர்.
அவர்கள் சென்ற சிறிது பொழுதில் கடைக்குக் காவல் நிலைய வண்டி ஒன்று வந்தது. “அந்தத் திருடர்கள் எங்கே?' என்னுங் குரலோடு காவலர் வந்தனர்.
“இப்பொழுதுதானே காவல் நிலையத்திற்கு அப்பெண்களும் முதலாளியும் போயுள்ளனர்" என்று நடந்ததைக் கூறினர்.