உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

"காவல் நிலையத்திலிருந்துதான் நாங்கள் வருகின்றோம். அப்பெண்களின் ஏமாற்றுச் செயல்தான் இதுவும்! திட்டமிட்டுக் கிளம்பிய திருட்டுக் கூட்டத்தினர் அவர்கள்" என்ற சொல்லிக் கொண்டே அவர்களைத் தேடத் தொடங்கினர்.

முதலாளியும் வாடிய முகத்துடன் கடைக்கு வந்தார்.

தோற்றம் எப்படி? அவர்கள் தொழில் எப்படி?

ஒருவன் அழகிய செருப்பு வைத்திருந்தான். அவை புத்தம் புதிதாக இருந்தன. அவன் நண்பன் கேட்டான். “எவ்வளவு அழகாக இருக்கின்றன.

இச் செருப்புகள்? இவற்றைப் பயன்படுத்தாமல் மூலையில் போட்டுவிட்டாயே ஏன்?”

66

“அழகானவைதான்; விலையும் கூடியவைதான். இருந்தாலும் வை செய்யும் கொடுமைகள் மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. என் கால்களுக்குதான் நன்றாகப் புலப்படுகின்றன. இவை கடித்துவிட்ட புண்களைப் பார்” என்று பதில் உரைத்தான். வடிவழகுக்கும் செயலுக்கும் உள்ள தொலைவு எப்படி?

கனிவுமிக்க இசையைக் காதல் மிகக்கொண்டு யாழில் மீட்டுவார்களாம். அவ்விசைகேட்டு அனுபவிக்க அசுணம் என்னும் பறவை நெருங்குமாம். இன்னிசையை அனுபவிப்பதே அசுணத்தின் வாழ்வாம். அது நெருங்கியவுடன் கனிந்த இசையை மாற்றிக் “கடபடா" இசையைப் பறையில் மீட்டுவார்களாம்.

அவ்விசை கேட்கப் பொறுக்காமல் செவிப் பறை வெடித்து வீழ்ந்துவிடுமாம். அதனைப் பிடித்துக் கொள்வார்களாம்! எவர்? வேடுவர்! என்ன கொடுமை!

இசையைப் பறவை பிடிக்கக் கண்ணியாகப் பயன்படுத்துவது வேடிக்கையா? வேதனையா? இசையின் இனிமை எத்தகையது? எத்தகைய கொடுமைக்குப் பயன்படுத்தப்படுகிறது?

உருவு அல்லது வடிவு வேறாகவும், செயல் அல்லது வினை வேறாகவும் இருப்பவர் பலர். அவர்கள் வலையில் எவரும் ஏமாந்துபோய் வீழ்ந்து விடக்கூடாது என்று வள்ளுவர் கருதினார். அதனை உலகத்தவர்க்கு எச்சரித்துக்காட்ட வேண்டுவது தம் கடமை எனக் கொண்டார். அதனால்,