உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் -29 -

மண்டிலத்தை ஆக்கிய விசுவாமித்திரரும், மற்றை மண்டிலங் களிற் பதிகங்கள் பலவற்றை ஆக்கிய வைவசுவதமனு, இடன், புரூரவர் முதலாயினாரும் அரசவகுப்பினரே ஆவர்; பலந்தர், வந்தியர், சங்கீர்த்தி முதலியோர் வைசிய வகுப்பினராவர். இருக்குவேதத்தின், முதல் மண்டிலத்துள்ள 100 ஆம் பதிகத்தை இயற்றிய ரிஜ்ராசுவர், அம்பரீஷர், சகதேவர், பயமாநர், சுராதர் முதலான இருடிகள் ஐவரும் விருஷாகிர் அரசன் புதல்வராவர் என்று இருக்குவேதத்தின் அநுக்கிர மணிகையே புகல்கின்றது. இங்ஙனமே, அவ்விருக்குவேதத்தின் 6 வது மண்டிலத்திலுள்ள 15-ஆம் பதிகத்தை ஆக்கிய அம்பரீடர் மகனான சிந்துத்வீபரும், அதன் 75- ஆம் பதிகத்தை இயற்றிய பிரியமேதர் மகனான சிந்துக்ஷித்தரும், அதன் 179-ஆம் பதிகத்தைப்பாடிய உசீநரரின் மகன் சிபியும், காசிமன்னன் திவோதாசன் மகன் பிரதர்த்தனரும், அதன் 98- ஆம் பதிகத்தைப் புகன்ற சந்தநுவின் மகன் தேவாபியும் எல்லாம் அரச இனத்தைச் சேர்ந்தோரே யாவர். இவ்வாறே இன்னும் பலர் உளர்.

L

மேற்சொல்லிய இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய க்ஷத்திரிய வைசியர் என்பார் தமிழ வேளாள வகுப்பினரே யாவர். யாங்ஙன மெனிற் கூறுதும்: மேற்காட்டிய ரிஜ்ராசுவர் முதலான அரச முனிவர் ஐவரும் சேர்ந்தியற்றிய பதிகத்தின் 12 ஆம் செய்யுளில் 'சோமன்’ என்னுங் கடவுள் ஐந்து இனத்தாரைக் காப்பவராகச் சொல்லப்படுகின்றனர். இச் 'சோமன்' என்னுஞ் சொல் 'ச உமா' என்னும் இருமொழிப் புணர்ச்சியாற்றோன்றி உமையோடு கூடினவர்' என்று பொருள்படும் என அதர்வசிரஸ் உபநிடத உரையிலே விளக்கப்பட்டிருத்தலின், அச்சொல் சிவபிரான் மேற்றாதலும், 'சோமநாதம்' என்னும் வடநாட்டுச் சிவபிரான் திருக்கோயில் அப் பெயர்பெற்றிருத்தலின் அஃது அதற்குப் பின்னும் ஒருசான்றாதலும் நன்கு விளங்கும். இனிச் சிவபிரானாற் காக்கப்படும் ஐவகை னத்தினர் ஆவார் துருவாசர்களும் யதுக்களும் அணுக்களும் துருகியர்களும் பூருக்களும் என ஐவர் ஆவரென்று கிரிபித் என்னும் ஆசிரியர் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார்.' இவ் வைவகை இனத்தினரும் தமிழ் மக்கட் பிரிவினரே யாவரென்று ராகொசின் என்னும் வரலாற்று நூலாசிரியர் தாம் ஆழ்ந்தாராய்ந் தெழுதிய வேத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/103&oldid=1591767" இலிருந்து மீள்விக்கப்பட்டது