உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

203

பார்ப்பனரும் அவர்வழிச் சார்ந்த தமிழ் அந்தணரும், வேளாரைச் சூத்திரரென வழங்குதற்கு வேண்டும் நிலையான ஏற்பாடுகளையெல்லாஞ் செய்து அவற்றின்கட் செருகி விட்டனர். வேளா ாளரிற் கற்றவர் எவரேனும் இப்புரட்டுகளைத் தெரிந்து காண்டு, வேளாளரின் பண்டை வழக்கவொழுக்கங் களெல்லாம் மிகச் சிறந்தனவாயிருத்தலின், இவர்களைப் பழைய நூல்களெல்லாம் உயர்குலத்தினராக மிகுத்துக் கூற, நீவிர் மட்டும் இவரைச் சூத்திரர் என இழித்துக் கூறுதல் என்னை?' என்று அவ்வாரியப் பார்ப்பனரையும் அவர் வழிச் சார்ந்தாரையும் வினவினால், அப்போது அவர்கள் மிகவும் ஆழ்ந்த சூழ்ச்சியுடையராய்ச் சூத்திரரென்னும் பெயரை எடுத்து விட டாமலும், அச் சூத்திரப்பெயர் கொண்டே அவரை அந்நேரத்தில் மகிழ்வித்தல் வேண்டியும் “நீங்கள் சற்சூத்திரர்” உங்களுக்கு ஊழியம் புரியும் ஏனையோரெல்லாம் ‘அசற் சூத்திரர்' எனக் கூறியும், அதனை நூல்களில் எழுதியும் அவரை ஏமாற்றி வந்தனர். அவ்ஏமாற்றங்களைத் தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சி யுணர்வில்லாதவர்களும் வடமொழியில் எவர் எவைகளை எழுதி எழுதி வைத்தாலும் அவைதம்மையெல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுள் அருளிச் செய்தனவாகவே நம்பி விடுவாருமான தமிழ் கற்றார் சிலர் தாம் வேளாளரா யிருந்துந் தம்மைச் ‘சற்சூத்திரர்' எனச் சொல்லிப் பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்! 'சூத்திரர்' என்னுஞ் சொல்லுக்குப் பொருள் 'மடமை யுடையோர்' ‘பிறர்க்கு ஏவல்வேலை செய்வோர்’ என்பனவாதல் அமர நிகண்டினால் நன்கு விளங்குதலால், தம்மைச் சற்சூத்திரர் என்போர் தம்மை ‘நல்ல மடையர்’ ‘நல்ல வேலைக்காரர்’ என்று கூறி மகிழ்வாரையே ஒத்திருக்கின்றனர்.

தமக்கு உதவி புரிந்த வேளாளரைச் சூத்திரரெனக் கூறித் தாழ்த்தி வைக்கும் பொருட்டு ஆரியப் பார்ப்பனர் அதுவே கண்ணுங்கருத்துமா யிருந்து பல ஏற்பாடுகளைப் பிற்காலத்திற் செய்து வைத்த தல்லாமலுந், தமிழ்நாட்டில் வேளாளரே செல்வமுஞ் சீருஞ் சிறப்புங் கல்வியும் நன்னடையும் நாகரிகமும் வலிமையும் உடையராயிருத்தலால், அதனையுஞ் சிதைக்கும் பொருட்டு, அவர்க்கு அடங்கி அமைதியாய் வாழ்ந்த குடிமக்கள் பலரையும் அவர்கட்கு எதிரிகளாக்கல் வேண்டி அவருட் சிலரை ‘சத்திரியர்' என்றுஞ் சிலரை ‘வைசியர்' என்றுஞ் சொல்லித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/228&oldid=1591897" இலிருந்து மீள்விக்கப்பட்டது