உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

33

தமிழருக்கு மறைநூல்கள் இருந்தன. அது பின்னர்க் கூறப்படும். தமிழ் மறைநூல்களைப் பார்ப்பதும் வழிபாடு, திருமணம் முதலியவற்றை நடத்துவதுமே தொழிலாகக் கொண்டு, பார்ப்பனர் என்னும் பெயருடன் ஒரு குலத்தார் முன்னமேயிருந்து, பின்பு ஆரியப் பிராமணர் வந்தபின் தம் தொழிலை யிழந்து விட்டனர். ஆரியப் பிராமணர் தமிழப் பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின், தாமும் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின், வடமொழிப் பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்கிவரக் காரணமில்லை.

தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக்கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டி லிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும். பாணருக்குத் தையல் தொழிலு முண்டு. பாணர்க்குச் சொல்லுவதும்.... தை.... என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்டபின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க.

>>

ஐரோப்பாவிலிருந்து கிரேக்கரும் ரோமரும் தமிழ்நாட்டிற்கு வந்து, குலமுறையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யாமை

8 சக்கிலி என்பது சாஷ்குலி (= புலையர்) என்னும் வடசொல்லின் திரிபென்பர் எட்கார் தட்ஸ்ற்றன்(Edgar Thurston)