உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஒப்பியன் மொழிநூல்

யால், யவனர் என்னும் கிரேக்கப் பெயராலேயே அழைக்கப் பட்டனர்.

தமிழ்நாட்டில் இதுபோது, பார்ப்பனருக்குத் தொழிலால் நெருங்கியுள்ளவர் புலவர், பண்டாரம், குருக்கள், பூசாரி, போற்றி, உவச்சன், நம்பி என்று கூறப்படும் தமிழக் குலத்தாராவர். இவருடைய ம் முன்னோரே, ஒருகால் தமிழப் பார்ப்பனராயிருந் திருக்கலாமோ என்று, இவர் பெயராலும் தொழிலாலும் ஐயுறக் கிடக்கின்றது.

ஐயர், அந்தணர்

ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு 'ஐ' என்பது பகுதி.

ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஒர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும், வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, ஐ' என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு.

"ஐவியப் பாகும்"

என்பது தொல்காப்பியம்.

(தொல். உரி. 89)

ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத்தக்க பெரியோன். வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவே யிருக்கும். ஒருவனுக்குப் பெரியோரா யிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும்.

தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில், . sire என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம்.

ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளையும், ஆர் விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண்பாலீறு பெற்றுக் காளியை அல்லது உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும், தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனையும், பின்பு அவனைப் போல அறிவு புகட்டும் ஆசிரியனையும்; உலக