முன்னுரை
59
(6) தென்சொல்லை வடசொல்போல ஒலித்தல்
குட்டம், முட்டி என்னும் தமிழ்ச்சொற்கள் குஷ்டம், முஷ்டி என்று வடமொழியில் வழங்குவதுபோல, வேட்டி என்னும் தமிழ்ச்சொல்லும், உலக வழக்கில் வேஷ்டி என்று தவறாய் வழங்குதலும் 'வேங்கட' என்பது வெங்கட்ட என்று வலித்தலும் காண்க.
(7) சில சொற்கள் தென்சொல்லா வடசொல்லாவென்று மயங்கற்கிடமாதல். எ-டு: மந்திரம்.
(8) தமிழர் தாய்மொழியுணர்ச்சி யிழத்தல்.
ஏற்கெனவே ஏராளமான வடசொற்கள் தமிழில் வந்து அடர்ந்தபின், மகமதிய ஆட்சியில் பல உருதுச்சொற்கள் தமிழில் வந்து கலந்தன. அவற்றுட் சிலவாவன:
அகஸ்மாத்
கோஷா
பவுஞ்சு
ஜமாபந்தி
அசல்
சபாஷ்
பிராது
ஜமீன்
அதாலத்
சாமான்
பைசல்
ஜமேதார்
அமீனா
சுபேதார்
மகஜர்
ஜல்தி
அமுல்
டபேதார்
மசோதா
ஜவாப்
அர்ஜீ
டாணா
மஜூதி
ஜவாப்தாரி
அவுல்தார்
தமாஷ்
மராமத்
ஜவான்
ஆஜர்
தஸ்தவேஜ்
மாஜி
ஜாகிர்தார்
உண்டியல்
தாக்கல்
மிட்டாதார்
ஜாகை
உஷார்
தாக்கீது
மிட்டாய்
ஜாட்டி
கச்சேரி
தாசில்தார்
ரத்து
ஜாப்தா
கசாய்
தாலுக்கா
ரஜா
ஜாமீன்
(கசாப்பு)
தைலி
ராஜிநாமா
ஜாரி
கஜானா
தொகையரா
லங்கோடு
ஜால்ரா
காலி
நகல்
லடாய்
ஜாலக்
கில்லேதார்
நமூனா
லாடம்
ஜாலர்
கிஸ்து
நாஷ்ட்டா
லுங்கி
ஜிகினா
கேலி
பசலி
லேவாதேவி
ஜிம்கானா
கைதி
படுதா
வார்சு
ஜிமிக்கி
கொத்தவால்
பர்வா
ஜப்தி
ஜில்லா
on 60fl
ஜோர்
ஷரா
ஷோக்
ஜெண்டா
ஷர்பத்
ஷாய்
ஹுக்கா
ஜேப்பு
ஷரத்து
ஷராப்பு
ஹோதா
(இவற்றுட் சில, உருதுவிற் கலந்த இந்திச் சொற்களாகும்.)