உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

ஒப்பியன் மொழிநூல் மகமதிய ஆட்சியின்பின், ஆங்கில ஆட்சியில் தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை இங்கெடுத்துக் கூறவேண்டுவதில்லை.

தேசியம் என்னும் நாட்டியல் இயக்கத்தில், தமிழிற் சில ஆரியச்சொற்கள் கலந்துள்ளன.

எ-டு: காங்கிரஸ் (இங்கிலீஷ்), மகாத்மா, சத்தியாக்கிரகம், வந்தேமாதரம், பாரதமாதா,ஜே, பிரச்சாரம், சுயராஜ்யம், ராஷ்ட்டிரபாஷா, சுதந்தரப் பிரதிக்ஞை.

இங்ஙனம் பற்பல மொழிகளிளின்றும், பலப்பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினது, தமிழில் அவற்றுக்கு நேர்சொல் இல்லாமலோ, அவற்றின் பொருளுக்கேற்ற புதுச் சொற்கள் புனைய முடியாமையாலோ அன்று; தமிழர்க்குத் தாய் மொழியுணர்ச்சி யில்லாமையாலேயே. தமிழ் தமிழர் வயமில்லாது ஆரிய வயப்பட்டுக் கிடக்கின்றது.

பாட்டியலில் எழுத்துக்கும் செய்யுளுக்கும், செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்தல்.

பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வரணம்; அடுத்த ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம்; இறுதி இரண்டு மெய்யும் சூத்திர வரணம் என்பதும்;

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்பதும்;

கலம்பகம் பாடும்போது, தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95 செய்யுளும், அரசர்க்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், மற்றவர்க்கு 30 செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும்.

தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானவும் கேடானவுமான, ஆரியக் கருத்துகள் தமிழ் நூல்களிற் கலத்தல்.

வரலாற்றுண்மையற்றனவும், மதியை மழுங்கச் செய்பவுமான ஆரியப் பழமைகள் தமிழில் மொழிபெயர்க்கவும் இயற்றவும் படல்.

இவை தமிழுக்கு அலங்காரமா, அலங்கோலமா என்று நடு நிலை

அறிஞர் அறிந்துகொள்க.