உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

ஒப்பியன் மொழிநூல்

என்றாவதுபோல, நொக்கிறான், நொப்பான் என்று நிகழ்கால எதிர்காலங்களில் ஆதல் வேண்டும். அங்ஙனமாகாமை காண்க.

இனி, “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” என்ற வரையறை கூட வழுவோவென் றையுறக் கிடக்கின்றது.

இங்ஙனம் தொல்காப்பியர் பல இடத்தில் தவறினதற்குக் காரணம், அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகள்போல் தமிழை யாராய்ந்தும், அவரது ஒப்பியலிலக்கணத்தில் சிலவிடத்துத் தவறினது, அவரது அயற் பிறப்பாலேயே.

இங்ஙனம் சில தொல்காப்பிய வழுக்களை எடுத்துக் கூறியதால், தொல்காப்பியத்தை இழித்துக்கூறினேன் என்று எள்ளளவும் எண்ணற்க. அங்ஙனம் கூறுபவன் கடைப்பட்ட கயவனே என்பதற்கு ஐயமில்லை. இற்றைத் தமிழ்நிலையின் உயிர்நாடி தொல்காப்பியம் ஒன்றே. சில குற்றத்தைக் குற்றமென்று கூறினேனேயொழிய வேறன்று என்க.

66

""

காலம்: தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை நான்மறை முற்றிய என்றும், தொல்காப்பியரை "ஐந்திரம் நிறைந்த" என்றும், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடைகொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட அஷ்டாத்யாயீ'யை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல்காப்பியர் இடைப் பட்டவர் ஆவர். பாரதக் காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000, பாணினி காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு.

.

தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவர். அகத்தியற்கு மிகப் பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும். அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர்; தொல்காப்பியர் பிந்தியவர்; இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே.

தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர்பின்மையினாலேயே அவர் நூல் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது.