178
ஒப்பியன் மொழிநூல்
அகப்பொரு ளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண் டனர். தையறியாது சில பார்ப்பனர் அகப்பொரு ளிலக் கணத்தைக் காமநூ லென்கின்றனர்.
66
'ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே
""
என்ற திருக்கோவைச் சிறப்புப்பாயிரச் செய்யுளே அவர்க்குச் சிறந்த விடையாகும்.
காமநூல் புணர்ச்சியின்பத்திற் கேதுவான பொருள்க ளையே கூறுவதாகும். ஒருவன் போர், கல்வி முதலிய தொழில் பற்றித் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோவதும், அவளிடம் சொல்லாமல் ஏகக் கருதியிருக்கும்போது, இரவில் தன்னை யறியாமல் கனவிலுளறித் தன் போக்கை அவளுக்குத் தெரிவித்து விடுவதும் எங்ஙனம் காமநூலுக்குரிய பொருள்களாகும்? தமிழரின் இல்லற வாழ்க்கையைக் கருத்துப் புலனாக்கும் ஓவியமே அகப்பொரு ளிலக்கண மென்க.
இனி, புறப்பொருளையும், போர்த்தொழிலொன்றே ற கூறுவதென்றும், பிற கலைவளர்ச்சியைத் தடுப்பதென்றும் குறை கூறுகின்றனர் சில பார்ப்பனர். பிறமொழிகளி லில்லாத பாருளிலக்கணத்தை வகுத்த தமிழர், அங்ஙனம் பொருளிலக் கணத்தைக் குன்றக் கூறுவரா என்றும் சற்று நினைத்திலர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணைகளில் அரசர்க்கும் மறவர்க்குமுரிய போர்த்தொழிலைச் சிறப்பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலைகளையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகைகளையும் அடக்கினர் முன்னை யிலக்கணிகள்.
வாகைத்திணையின் இலக்கணமாவது:
66
என்பது.
"வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப”
(தொல். புறத்.15)