164
ஒப்பியன் மொழிநூல்
வடமொழி உலக முதன்மொழியாக முடியாமை மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி முதன்மொழி யாயிருக்கலாமென்று கருதுகின்றனர்.
உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே. குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசைநிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீனம் வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும் சென்றதாகத் தெரிகின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனியம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை.
பால்டிக் கடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finn- ish) என்னும் துரேனிய மொழி வழங்குவதும், சுவீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுள்ள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறி யிருப்பதும் இக் கொள்கைக்குச் சான்றுகளாம். க்
ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவகைய:
(1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன்சென்றவை.
வடஇந்தியம் மேலையாரியம் கீழையாரியம்
கா :
தமிழ்
நான்
மைன்
me
நாம்
ஹம்
wir, we
vayam
நூன்
தூ
du, tu
tvam
நூம்
தும்
ye, you
yuyam
இருத்தி
eart, es
asi
(2) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் இடைக்காலத்திற் சென்றவை, அல்லது நேரே மேலையாரியஞ் சென்றவை.