உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

வேர்ச்சொற் கட்டுரைகள்

எளிமை = எளிதாய்ச் செய்யும் நிலை, தாழ்வு, வறுமை, தளர்வு.

எளிய விலை - குறைந்த விலை.

எளியன் = வறியவன், தாழ்ந்தோன், எளிதாய் அடையப் படுபவன்.

எளிவு- எளிய தன்மை.

“உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே”

எளுமை = எளிமை.

(திவ். திருவாய். 1: 3:1)

எள்- எய். எய்த்தல் = 1. இளைத்தல். “எய்த்த மெய்யே னெய்யே னாகி” (பொருந. 68). 2. உடம்பு வருந்துதல். “எய்யாமை யெல்லாவறமுந் தரும் ” (குறள். 296). 3. குறைவுறுதல். “எய்த்தெழு பிறையினை விளைவின் றாக” (இரகு. யாகப். 8).

எய்ப்பு = 1. இளைப்பு. “எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து ’” (தேவா. 189:3).2. வறுமைக் காலம். “எய்ப்பினில் வைப்பென்பது' (பழ. 358). "எய்ப்புழி வைப்பாம் என” (பழ. 136).

=

எய்ப்பில் வைப்பு வைக்கப்படும் ஏமப்பொருள்.

இளைத்த காலத்தில் உதவுதற்கு ஈட்டி

“அப்பாவென் னெய்ப்பில் வைப்பே” (தாயு, பராபர. 25) எய்ப்பினில் வைப்பு = எய்ப்பில் வைப்பு (provident fund)

"நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை”(தேவா. 818:2)

எள்- ஏள்- ஏளனம் = இகழ்ச்சி.

ஏள்- ஏளிதம் = இகழ்ச்சி.

ஏள்- ஏசு. ஏசுதல் = இகழ்தல்.

ஏள் = ஏழ் - ஏழை.

ஏழை = 1. வறியவன். 2. அறியாமை. “ஏழைத்தன்மையோவில்லை தோழி" (கலித். 55 : 23, உரை). 3. அறிவிலான், அறிவிலாள். “ஏமுற்ற வரினும் ஏழை” (குறள். 873). 4. பெண். “எருதேறி யேழையுடனே” (தேவா. 1171 : 2).

ஏழைமை = வறுமை, அறியாமை.

ஏள் - ஏட்டை = 1. வறுமை. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி. 358). 2. இளைப்பு. “வெண்ணிணத்த