உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்* (வளைதற் கருத்துவேர்)

41

5. உருண்டு திரண்ட வண்டிக்குடம் (hule). 6. குடதாடி என்னும் தூணுறுப்பு. 7. திரட்சி.

ம. குடம், தெ. குடமு, க. குட, வ. குட்ட.

,

குணங்கு- குடங்கு. குடங்குதல் = வளைதல்.

குடங்கு- குடங்கர் = 1. குடம். "குடங்கர் கொணர்ந்திடா” (கந்தபு. தேவகிரி. 24). 2. குடிசை. "குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று” (குறள். 890). 3. கும்பவோரை (சூடா.).

குடிசை என்னும் பொருளில், குடங்கர் என்னுஞ் சொல்லைக் குட்டங்கக (kutangaka) என்று திரிப்பர் வடமொழியாளர். ஆட்டுக்குடில் போன்ற அரையுருண்டை வடிவான குடிசைகளில் குழுவரும் பன்றியாடிகளும் போன்ற அநாகரிக மாந்தர் இன்றும் வதிந்து வருதல்

காண்க.

=

குடம் - குட = வளைந்த (திருமுருகு. 229, உரை).

குட

குடவு = வளைவு. குடவுதல் = வளைவாதல்.

குடவியிடுதல்

=

மரிவையர்கள்” (திருப்பு. 514).

வளைத்து அகப்படுத்துதல். 'குடவியிடு

= வளைவு. குடக்கு- குடக்கி

=

குணக்கு குடக்கு - குடக்கம்

வளைவானது.

குணகு குடகு

-

குடகம்

கடகம் = 1. வட்டம் (பிங்.).

2. வட்டமான கேடகம் (திவா.). 3. தோள்வளை. “கடகஞ் செறித்த கையை” (மணிமே. 6 : 114). 4. பெருவிரலும் சுட்டுவிரலும் வளைந்து வளையம் போல் ஒன்றோடொன்று உகிர்கவ்வ, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை. (சிலப். 3 : 18, உரை). 5. பனையகணியால் முடையப்பட்ட வட்டமான பெரும் பெட்டி (புறம். 33, உரை). இச் சொல் இன்றும் நெல்லை வட்டாரத்திற் பெருவழக்காக வுள்ளது. 6. ஒரு நகரைச் சூழ்ந்திருக்கும் மதில் (பிங்.). 7. மதில் சூழ்ந்திருந்த ஒரிசாத் தலைநகரம் (Cuttack).

கடகம் (தோள்வளை)- வ. கட்டக.

-

குடம் - குடந்தம் = 1. குடம் (பிங்.). 2. மெய்வளைத்துச் செய்யும் வழிபாடு. 'குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி” (திருமுருகு. 229). 3. நால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுருகு. ப. 47, அடிக்குறிப்பு).

"நால்விரன் முடக்கிப் பெருவிர னிறுத்தி

நெஞ்சிடை வைப்பது குடந்த மாகும்.”