உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்

5

குல்' (குத்தற் கருத்துவேர்)

குல் - குள். குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லைநாட்டு வழக்கு). குள்- குளவி = கொட்டுந் தேனீ.

ம. குளவி, க. கொளவி.

குள் - கள் = முள். கள்- கள்ளி = முட்செடி. ஒ.நோ : முள்- முள்ளி. “கள்ளியங் கடத்திடை” (ஐங்.323).

=

ம., க. கள்ளி. கள் + மணி = கண்மணி = முட்போற்கூர் முனையுள்ள உருத்திராக்கம்.

முட்போன்ற முனையுண்மையால் உருத்திராக்கம் முண்மணி யென்றும் பெயர் பெறும்.

"முண்மணிகள் காய்க்குமரம் முப்பதுட னெட்டே” என்று விருத்தாசலப் புராணம் (உருத்திராக். 4) கூறுதல் காண்க. பலாக் காயின்மேற் காணப்படும் முனைகளும் முள்ளென்று பெயர் பெற்றிருத்தலை நோக்குக. ஆரியர் தென்னாடு வருமுன்னரே சிவநெறி குமரிநாட்டில் தோன்றிய தென்மதமாதலால், அதை ஆரியப்படுத்திய வடவர் கண்மணியென்னுங் கூட்டுச்சொல்லின் பொருளைப் பிறழவுணர்ந்து, அதற்கேற்ப, முள்ளுள்ளதென்றே பொருள்படும் அக்கம் (அக்கு - முள், முள்ளுள்ள உருத்திராக்கம். அக்கு - அக்கம்) என்னும் தென்சொல்லை அகடி என்று திரித்து, உருத்திரன் கண்ணீரில் தோன்றியதென்று முப்புரஎரிப்புக் கதை யொன்றுங் கட்டி விட்டனர். இதுவும் இதுபோன்ற திரிப்புகளும் தித்திருக்குகளும் என் 'தமிழர்மதம்’ என்னும் நூலில் வெள்ளிடை மலையாய் விளக்கப்பெற்றுள்ளன.

கள்- கடு = 1. முள் (திவா.). 2. முள்ளி (மலை.).