உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

குல் (குத்தற் கருத்துவேர்)

55

ம. கடு. கடு - கடி = கூர்மை. “கடியென் கிளவி காப்பே கூர்மை” (15681.457).

மாலை.

கள்- கண்டு = முள்ளுள்ள கண்டங்கத்தரி.

கண்டு - கண்டி = 1. முள்ளுள்ள உருத்திராக்கம், 2. உருத்திராக்க

“கண்டியிற் பட்ட கழுத்துடையீர்"

கண்டி கண்டிகா(வ.).

(தேவா. 586 : 6)

கண்டிகை = உருத்திராக்கமாலை (பிங்.) கண்டிகை –

கண்டு - கண்டம் = 1. கள்ளி (மலை.). 2. எழுத்தாணி (பிங்.). 3. கண்டங்கத்தரி, உருத்திராக்கமணி. கண்டங்கத்தரி - கண்டகாரி (வ.). கண்டம் (முள்) - காண்டா (இந்தி).

கண்டு - கண்டல் = 1. முள்ளி (சூடா.). 2. நீர்முள்ளி (மலை.). 3. முள்ளுள்ள தாழை. “கண்டல் திரையலைக்குங் கானல்” (நாலடி. 194). கண்டல்- கண்டலம் = 1. முள்ளி. 2. நீர்முள்ளி (மூ.அ.).

கண்டு

கண்டகம் = 1. முள். “இளங்கண்டகம் விடநாகத்தின் நாவொக்கும்" (இறை. 41 : 172). 2. நீர்முள்ளி. "கண்டகங்காள் முண்டகங்காள்” (தேவா. 268:2). 3. உடைவாள். (திவா.). 4. வாள் (சூடா.). கண்டக சங்கம் = முட்சங்கு. கண்டகம் - கண்டக (வ.).

கண்டகம் - கண்டகி = 1. தாழை. "வெம்மினது கண்டவியன் கண்டகி யெனவும்” (கந்தபு. தேவர்புல. 20). 2. இலந்தை. (இலக். அக.) 3. ஒருவகை மூங்கில் (இலக். அக.) 4. முதுகெலும்பு.

குள்- கிள், கிள்ளுதல் = முள்ளுதல். கிள் - கிள்ளி - கிளி = கூரிய அலகினாற் கொத்தும் அல்லது கடிக்கும் பறவைவகை.

கிள் - கிள்ளை = கிளி.

கிள்- ம. கிள்ளு, தெ. கில்லு (g). AO- ம. கிளி, தெ. சிலுக்க.

குள்- கெள்- கெளிறு - கெடிறு - கெளிற்றி- கொளுத்தி.

குள்- கொள்- கொய். கொய்தல் = உகிராற் கிள்ளியெடுத்தல். ள்-

ய். ஒ.நோ: தொள்- தொய், பொள்- பொய்.

குள் - குட்டு. ஒ. நோ : வள்- வட்டு. குட்டுதல் - கைமுட்டியால் தலையிற் குத்துதல். ம., தெ., க., து. குட்டு.

குட்டு - குத்து.ஒ.நோ: முட்டு - முத்து.