உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

வேர்ச்சொற் கட்டுரைகள்

நடு-நட்டு.நட்டுதல் = கல் கம்புதூண் முதலியவற்றை ஊன்றுதல். “நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே” (சிவவாக்கியர் பாடல்).

இச் சொல் சென்னைப் ப.க.க.த. அகரமுதலியில் இல்லை.

நட்டு - நாட்டு. நாட்டுதல் = 1. நிறுவுதல். “கற்பசு நாட்டி (திருவாச. 9:3).2. நிலைநிறுத்துதல். "சிலப்பதிகார மென்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” (சிலப். பதி. 60). 3.நீடு வாழவைத்தல். 4. படைத்தல். “மண்ணாட்டுநர் காக்குநர் வீட்டுநர் வந்த போதும்” (கம்பரா. நகர்நீ. 122). 5. எழுதுதல். "இவன் நம்முடையான் என்று அங்கே நாட்டு என்று” (ஈடு, 4: 5: 2).

கை நாட்டுதல் = 1. கையெழுத்திடுதல். 2. தற்குறி கீறுதல்.

நெட்டுக்குத்து- நட்டுக்குத்து.

நெட்டு - நட்டு = உப்புக் கொட்டி வைக்கும் மேடை (C.G.). தெ. நட்டு.

நீள் - நீர் = நீண்டு செல்லும் புனல். ம. நீர், நீரு, க.நீர், தெ.நீலு. நீர் - நீரம் = புனல் (பிங்.). நீரம் - வ. நீர.

நீர் - ஈர் = ஈரம். “ஈர்நறுங் கமழ்கடா அத்து" (கலித். 21). 2. பசுமை. "இருவெதி ரீர்ங்கழை” (மலைபடு. 207). 3. நெய்ப்பு. “ஈர்பெய்யுந் தளிரொடு” (கலித். 32). 4. இனிமை. “ஈர்ங்கொடிக்கே” (திருக்கோ. 28). 5. கரும்பு (மலை.).

நீரம் – ஈரம் = 1. நீர்ப்பற்று. “ஈரம் புலராக் கரத்தோருக்கு” (வில்லி பா. திரௌபதி. 97). 2. குளிர்ச்சி (சூடா.). 3. பசுமை. 4. அருள். “மலைநாட னீரத்துள்” (கலித். 41). 5. நயனுடைமை. “எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும்” (தொல். கற்பு. 6). 6. அன்பு. “ஈரமில்லா நெஞ்சத்தார்க்கு” (மூதுரை, 2).

ம., ஈரம், க. ஈர, தெ. ஈமிரி.

நீர் = 1. புனல். "நிலந்தீ நீர்வளி” (தொல். மரபு. 90). 2. சாறு. “கரும்பினை... யிடித்துநீர் கொள்ளினும்" (நாலடி. 156). 3. சிறுநீர். "இவ்வெல்லையி னீர்பெய்து யான்வரு காறும்” (பிரமோத். 2 : 50), 4. கடல். “நீரொலித் தன்ன” (மதுரைக். 369). 5. ஈரம் (W.). 6. குளிர்ந்த தன்மை. 7. தன்மை. “அன்ன நீரார்க்கே யுள” (குறள். 527). 8. நீர்ப்பொருள்.

நீர் - நீர்மை = 1. நீரின் தன்மை (குறள். 195, உரை). 2. சிறந்த தன்மை. “நீர்மை யுடையார் சொலின்” (குறள். 195). 3. தன்மை. "நெடுங்கடலுந்