உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

வேர்ச்சொற் கட்டுரைகள்

நிலைப்பு = 1. மாறாதிருக்கை. 2. என்றுமிருக்கை.

6

நிலைமை = 1. படித்திறம். “பண்பு மேம்படு நிலைமையார்” (பெரியபு. திருநீலநக். 23). 2. இயல்பு. "வலியி னிலைமையான் வல்லுருவம்” (குறள். 273). 3. நிற்குநிலை. 4. உறுதி "நிலையி னெஞ்சத்தான்” (நாலடி. 87). 5. வாழ்வுநிலை. 6. உடல்நிலை. 7. உளநிலை.

6

நிலையுதல் = நிலைபெறுகை. "தோற்ற முடையன யாவும் நிலையுத லிலவாந் தன்மை” (குறள். அதி. 34, உரைத் தோற்றுவாய்).

நிலை- நினை. நினைத்தல் = ஒன்றை மனத்தில் நிலைக்கச் செய்தல்.

“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு

நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே”

(கலித்.9)

என்னும் 9ஆம் கலித்தாழிசை யீற்றடி முதற்சீர், “நிலையுங்கால்” என்றும் பாட வேறுபாடு கொண்டிருந்திருக்கலாம்.

நில் - நிற்பு = நிற்றல்.

நிற்பு = நிற்பாட்டு. நிற்பாட்டுதல் = 1. நிறுத்திவைத்தல்.

நில் - நிற்றம்.ஒ . நோ : வெல் - வெற்றம், கொல் - கொற்றம்.

நிற்றம் = நிலைப்பு. நிற்றம்- நிற்றல்.

நிற்றலும் = நிலையாக, என்றும், எந்நாளும், "குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி” (சூடா. 7:76).

நிற்றம் - நிச்சம்.ஒ. நோ. : முறம் - முற்றில்- முச்சில்.

நிச்சம்

=

என்றும், எப்போதும். “நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” (தொல். களவு. 8). பிரா. நிச்சம்.

நிற்றல் - நிச்சல் = எப்போதும், எந்நாளும். "நிச்ச லேத்து நெல்வாயி லார்தொழ” (தேவா. 21 : 3).

க. நிச்சல், தெ. நிச்சலு.

நிச்சல் - நிச்சலும்

=

எப்போதும், எந்நாளும். "நிச்சலும்

விண்ணப்பஞ் செய்ய” (திவ். திருவாய். 1: 9 : 11).

க.நிச்சலும்.

நிச்சம்-நித்தம். ஒ.நோ: நச்சு - நத்து.