1
7
புல் ' பொருந்தற் கருத்துவேர்
புல்லுதல் = 1. பொருந்துதல். “அல்லாவாயினும் புல்லுவ வுளவே” (தொல். பொருளியல், 27). 2. புணர்தல். “புலந்தாரைப் புல்லா விடல்” (குறள். 1303). 3. தழுவுதல். 'என்னாகம்.... புல்லி" (பு.வெ. 9: 49). 4. வரவேற்றல். “புல்லா வகம்புகுமின்” (நாலடி. 303). 5. ஒத்தல். 'புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல” (தொல். பொருள். 289, உரை). 6. ஒட்டுதல் (W.). 7. நட்புச் செய்தல். “ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும்” (தொல். புறத். 21, உரை).
புல் = புணர்ச்சி (பிங்.).
புல் = புலி (திவா.).
புல் - புல்லி - புலி = முன்னங் கால்களால் தழுவிப் பற்றும் வேங்கை அல்லது சிறுத்தை.
ம., க., தெ., புலி, து பில்லி.
புல் - புல்கு. புல்குதல் = 1. அணைதல். அணைத்தல். ‘அன்னந் தன்னிளம் பெடையொடும் புல்கி” (தேவா. 584:9). 2. புணர்தல். (சது.). 3. நண்பராய் மருவுதல் (யாழ்ப்.).
புல்- புலம் = 1. ஐம்பொறிகள் பொருள்களொடு பொருந்தி அறியும் அறிவு. “நுண்மா னுழைபுலம்” (குறள். 407). 2. பொறியுணர்வு. “அடல்வேண்டு மைந்தன் புலத்தை” (குறள். 27 : 6). 4. இலக்கணம். "புலந்தொகுத் தோனே" (தொல். பாயிரம்). 5. நூல். 6. மறைநூல். “புலம்புரி யந்தணர்" (பரிபா. 6 : 45). 7. கூர்மதி (W.). 8. துப்பு (C.G.). 9. பொருந்தியிருக்கும் நிலம். "புலங்கெட விறுக்கும் வரம்பி றானை” (புறம். 16). 10. நிலம். 11. விளைநிலம். "விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்” (குறள். 85).
புலம் - புலன் = 1. பொறியறிவு. 'கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியு மைம்புலனும்” (குறள். 1101). 2. பொறி, “புலனொடு புணரான்” (ஞானா.