உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

வேர்ச்சொற் கட்டுரைகள்

நினைக்கிறவன் புத்தி கெட்டவன்” (பழ.). போன ஆண்டு மழை பெய்யவேயில்லை (உ.வ.). 11. மறைதல். பொழுது போயிற்று (உ.வ.). 12. முடிவாதல். "இன்ப மாவதே போந்தநெறி யென்றிருந்தேன்” (தாயு. சின்மயானந்த. 5). 13. புணர்தல். அவளோடு போனான் (உ.வ.).14. சாதல்... "தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்” (தேவா. 692 : 2).

போ- போக்கு = 1. செல்கை. வழிப்போக்கு. 2. மனச்சாய்வு. அவன் போகிற போக்கு எனக்குப் பிடிக்கவில்லை (உ.வ.). 3. வகை. அது ஒரு போக்கு. 4. களைகண். போக்கற்றவன் (உ.வ.). 5. புகல். “இலங்கை போக்கறவும்” (கம்பரா. மாயாசனக. 83). 6. நிலவாசி. ஆற்றுப்போக்கான இடம். 7. சாட்டு. ஒரு போக்குக் காட்டுவதற்குக் கடன்காரனை அவனிடம் அனுப்பினேன் (உ.வ.). 8. சாக்குப் போக்குச் சொல்லாதே குற்றத்தை ஒத்துக்கொள்(உ.வ.). 9. குற்றம். "போக்கறு பனுவல்” (தொல். சிறப்புப் பாயிரம்). 10. சாவு. “போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே” (திருவாச. 1: 77).

போகவிடு- போக்கு- போடு போடுதல் = வலிதாய்க் கீழிடுதல்.

=

போகடுதல் = (செ. குன்றாவி.) 1. போகவிடுதல். "போகெனப் போகடா” (சீவக. 1365). 2. விட்டுவிடுதல். “போகட்ட உடம்பையும்” (சீவக. 951, உரை).

376 : 4).

(செ.கு.வி.) நீங்குதல். "பொல்லாதது போக்கடும்" (தேவா.

போ- போகு. போகுதல் = 1. போதல். 2. நீளுதல்.

போ -

-

=

போது. போதுதல் = 1. செல்லுதல். 2. விரிதல். 3. போதியாதாதல். சொன்னால் மட்டும் போதுமா? எழுதிக் கொடுக்க வேண்டாவா? (உ.வ.).

புழு

புழல்

=

= 1. உட்டுளை. "பூழி பூத்த புழற்கா ளாம்பி” (சிறுபாண். 134). 2. சாய்கடை (சலதாரை) (பிங்.). 3. பண்ணியாரம். “தீப்புழல் வல்சி” (மதுரைக். 395). 4. மீன்வகை (பிங்.).

புழல் - போல் = 1. உள்ளீடல்லாதது. போல் கம்பிx கெட்டிக்கம்பி. 2. (உட்டுளையுள்ள) மூங்கில் (மலை.). 3. புகல்(W.). 4. பொய்.

தெ.போலு.

புழல்- புகல் = புரையுள்ளது (நெல்லை).

புகல்வேலை - அணிகலங்களில் உட்டுளையமையச் செய்த வேலை.