புல் (துளைத்தற் கருத்துவேர்)
105
புகலி = 1. புகலடைந்த – வன் - வள். 2. ஒரு பெரு வெள்ளக் காலத்திற் புகலிடமாயிருந்த சீகாழி.
புகு - புகார் = ஆறு கடலொடு கலக்குமிடம். “புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” (புறம். 30).2. காவிரி கடலொடு கலந்த இடத்துக் காவிரிப்பூம்பட்டினம். “பெரும்பெயர்ப் புகாரென் பதியே’ (சிலப். 20 :
56).
புகு- புகுது. புகுதுதல் = 1. உட்செல்லுதல். “பொய் யிலங்கெனைப் புகுதவிட்டு” (திருவாச. 5 : 92). 2. நிகழ்தல். “வேறொன்றும் புகுதா விட்ட”. (பெரியபு. எறிபத்த. 38).
புகுது - புகுதி = 1. மனைவாயில் (பிங்.). 2. நிகழ்ச்சி. 'புகுதி யின்னதால்” (கந்தபு. சிங்கமு. 20). 3. நுண்மதி. 'புகுதி கூர்ந்துள்ளார் வேதம்” (கம்பரா. முதற் போர். 222). 4. வழி (அரு. நி.). 5. வருவாய் (அரு. 7.).
புகுது- புகுரு. புகுருதல் = புகுதல்.
புகுரு- புகுர்- பூர். பூர்தல் = புகுதல்.
பூர்- பூரான் = மண்ணிற்குள் விரைந்து புகும் நச்சுப் பூச்சி.
புகவொட்டு- புகட்டு. புகட்டுதல் = 1. நீர்ப்பொருளைக் கலத்தில் ஊட்டுதல். குழந்தைக்குச் சங்கில் பால் புகட்டு (உ.வ.). 2. அறிவுறுத்துதல். “செவிதிறந்து புகட்ட” (திருவிளை. விடையிலச். 4).
=
புகட்டு – போட்டு. போட்டுதல் = புகட்டுதல். போட்டுப் பால், குழந்தைக்கு மருந்து போட்டு (உ.வ.).
புகவிடு- புகடு. புகடுதல் = வீசியெறிதல். “மரனொடு வெற்பினம் புகட வுற்ற பொறுத்தன” (கம்பரா. நாகபாச. 146).
புகு- போ. போதல் = 1. புகுதல். ஊசியின் காதில் இந்த நூல் போகுமா? (உ.வ). 2 எண்ணில் அடங்குதல். பத்தில் ஐந்து இரண்டு தரம் போகும் (உ.வ.). 3. செல்லுதல். “மாமலர் கொய்ய... யானும் போவல் (மணிமே. 3:83). 4. நெடியதாதல், நீளுதல், நேராதல்.
“வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள”
(தொல்.உரி.19)
5. விரிதல். போது = விரியும் பேரரும்பு. 6. பரத்தல். “எதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி (கலித். 144 : 40). 7. கூடியதாதல். மூச்சுவிடப் போகவில்லை (உ.வ.). 8. நீங்குதல். குடிபோன வீடு (உ.வ.). 9. ஒழிதல். “பல்போனாலும் சொல் போகுமா? (பழ.). 10. கழிதல். “போனதை