132
வேர்ச்சொற் கட்டுரைகள்
கிருந்தன்று” (நாலடி. 258). 20. ஏரண மேற்கோள். “பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல்” (மணிமே. 29: 59). 21. துணிபொருளுள்ளவிடம். “பக்கந்துணிபொருளுக் கிடமாம்” (சி.சி. அளவை. 9). 22. மறுதலை யுய்த் துணர்வு (அருத்தாபத்தி). 23.நாடு.
பக்கம் - வ. பக்ஷ.ஒ.நோ: L. pagus, country, district.
பக்கம்- பக்கல் = 1. பக்கம். "என்பக்க லுண்டாகில்” (பெரியபு. இயற்பகை. 7). 2. இனம் (W.). 3. மாதநாள் (தேதி).
பக்கு - பங்கு = 1. பாகம். “பங்குலவு கோதையுந் தானும்” (திருவாச. 16:9). 2. பாதி (சூடா). 3. கூறு. 4. பக்கம். என் பங்கில் தெய்வம் இருக்கிறது (உ.வ.). 5. இரண்டு அல்லது இரண்டரைச் செறு (ஏக்கர்) நன்செயும், பதினாறு செறு (ஏக்கர்) புன்செயுங் கொண்ட நிலம் (C.G.288). ம. பங்கு.
பங்கு- பங்கிடு. பங்கிடுதல் = 1. பகுத்துக் கொடுத்தல். 2. பாகம் பிரித்தல்.
பங்கு- பங்கன் = தன்பாகமாகக் கொண்டவன். “மங்கை பங்கனை மாசிலா மணியை” (தேவா. 549: 5).
பங்கு- பங்காளி = 1. தொழிற் கூட்டாளி. 2. தாயத்தான்.
பங்குக்காரன் = பங்கிற் குரியவன்.
பங்கு- பங்கம் = 1. பங்கு. "பங்கஞ் செய்த மடவாளொடு” (தேவா. 855 : 5). 2. பிரிவு. "பங்கப் படவிரண்டு கால்பரப்பி” (தனிப்பாடல்). 3. துண்டு. 4. கேடு. "அற்பங்க முறவரு மருணன் செம்மலை” (கம்பரா. சடாயு.8).
பங்கு- பங்கி = 1. பாகமாகப் பெற்றுக்கொள்பவன். “நஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வ முண்டோ” (தேவா. 392 : 6). 2. ஆறாண்டிற் கொருமுறை சீட்டுப் போட்டுச் சிற்றூர் நிலத்தைச் சிற்றூரார்க்குக் கொடுக்கும் பற்றடைப்பு முறை (W.G.).
முப்பங்கி (திரிபங்கி), பதின்பங்கி (தசபங்கி), நூற்றுப் பங்கி அல்லது பதிற்றுப்பதின்பங்கி (சதபங்கி) என்பன, ஒரே பா அல்லது பாவினம் முறையே மூவேறு பான்வேறு பதிற்றுப்பான் வேறு பா அல்லது பாவினமாகப் பிரிந்து, வெவ்வேறு பொருள்படுமாறு பாடப்படும் சொல்லணிச் செய்யுள் வகைகள்.
திரிபங்கி (முப்பங்கி) என்பது. மூவளைவாக உடம்பை வளைத்து நிற்கும் நிலையையுங் குறிக்கும். "வெள்கிய திரிபங்கியுடன்” (அழகர்கலம். 1).