உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் 31

"நான் அந்தச் சுமையைச் சொல்லவில்லை. நம் சுமையை, இறக்கி வைப்பதற்காகப் போகுமிடம் கோயில்; அங்கே, பலர் வீட்டுச் சுமை, வேலைச்சுமை, வரவு செலவு கணக்குச் சுமை, இன்னும் என்னென்னவோ சுமைகளை மூட்டை மூட்டையாகக் கட்டிக்கொண்டு போகின்றனர். இறைவன் முன்னிலையிலும் என்னென்னவோ எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதனால், கோயிலுக்கு வந்த பயனை இழக்கின்றனர். அந்த மனச் சுமையைக் கொண்டு போகவேண்டா என்று தான் கூறினேன். இன்னொன்று; நமக்கோ, வேலை நெருக்கடி இருக்கக் கூடாது. கோயிலிலோ, கூட்ட நெருக்கடி இருக்கக் கூடாது. ஆரஅமரப் பார்த்து ஆண்டவனை வழிபடுவதற்கு அத்தகைய பொழுது தான் வாய்ப்பாக இருக்கும்" என்றான் பொன்னப்பன்.

இருவரும் திட்டப்படுத்திக்கொண்டு மாநகர் மதுரைக்குக் கிளம்பினர். வரும்போதே அவர்களுக்குப் பழைய பழமொழிகள் நினைவுக்கு வந்தன. ஆமாம், "மதுரை பாராதவன் மாபாவி; திரும்பிப் பாராதவன் தீம்பாவி" என்று பழமொழிகள் வழங்குகின்றனவே. இவற்றின் விளக்கம் என்ன? நகரப் பரப்பைப் பாராதவனா? தேரோடும் திருவீதி பாராதவனா? கவின்மிக்க கடைத்தெருவுகளைப் பாராதவனா? மாட மாளிகைகளையும், மன்றங்களையும், மண்டபங்களையும், சோலைகளையும், சாலைகளையும், ஆலைகளையும், அரங்குகளையும் இவற்றைப் போன்றவற்றையும் பாராதவனா? இவையெல்லாம் ஊருக்கு உள்ளவைதாமே! இவற்றைப் பாராமையா பாவம்?" என்றான்

பொன்னப்பன்.

“அழுக்கைப் போக்கிக்கொள்ள

யாரும் சேற்றில்

குளிப்பார்களா? அழுக்கைப் போக்குதற்கு நல்ல நீரே உதவும். அது போல் பாவத்தைப் போக்கிக் கொள்ளுதற்குப் பாவமில்லாத இடத்தை -பாவத்தைப் போக்குமிடத்தைத் - தேடித்தானே போக வேண்டும்! ஆதலால் 'மதுரை பாராதவன்' என்பது 'மதுரைக் கோயிலைப் பாராதவன்' என்றே பொருள் தரும்! ஆதலால் மதுரைப் பெருமையே கோயில் பெருமைதான்! அதனால்தானே கோயில் மாநகர் என்று மதுரையைக் கூறுகின்றனர்" என்று கண்ணப்பன் கூறினான்; பொன்னப்பன் பூரிப்படைந்தான். “நாம் நல்லதுணை" என்று பாராட்டினான்.

"மலையேறிப் போனாலும் மைத்துனன் துணை வேண்டும் என்னும்போது, மதுரைக்குப் போக மைத்துனன் துணை கிடைப்பது நல்லதுதானே" என்று கண்ணப்பன் பாராட்டி