உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

7

னான். இருவரும் மதுரைத் திருக்கோயில் முன்னிலையை அடைந்தனர். அஃதாவது, கிழக்குச் சித்திரை வீதியை!

நாம் மேற்குக்கோபுர வாயிலுக்கு நேரே வந்தோம். அவ்வழியாகக் கோயிலுக்குள் நீ நுழையவில்லை. பிறகு தெற்குச் சித்திரை வீதியில் வந்தோம். அங்குள்ள தெற்குக் கோபுர வாயில் வழியாயும் கோயிலுக்குள் புகவில்லை. இப்பொழுது கீழச் சித்திரை வீதிக்கு வந்துள்ளோம். அவ் வழிகளில் போயிருக்க லாமே" என்றான் கண்ணப்பன்.

"நீ சொல்கிறபடி கோயிலுக்குள் போயிருக்கலாம். நம்மவர் உண்ணுதற்குப் போடும் இலையையும் இப்படிப்போட வேண்டுமென ஓர் ஒழுங்கு வைத்துள்ளனர். இத்தகையவர்கள் கோயிலுக்குள் போய்வழிபட ஓர் ஒழுங்குமுறை வகுத்திருப்பதில் வியப்பில்லையன்றோ! நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள எந்த வழியில் சென்றாலும் கோயிலுக்குள் செல்லலாம். ஆனால், 'நேரே நின்று கும்பிட நினைத்த' நந்தனாரைப்போல, நாமும் நேரே சென்று கும்பிட நினைப்பதுதான் முறையாகும். ஆதலால் அன்னை அங்கயற் கண்ணி திருக்கோயிலின் திருவாயில் வழியே செல்வோம்" என்று முன்னே நடந்தான் பொன்னப்பன்.

"நூலுக்கு முன்னுரை உண்டு; முகவுரை, நூன்முகம் முதலிய பெயர்களும் முன்னுரையையே குறிக்கும். கோயிலுக் கும் முன்னுரை உண்டு என்பதை இதோ பார்! இந்த நுழைவாயிலே காட்டவில்லையா? மூத்த பிள்ளையாரும் இளையபிள்ளையாரும் முகங்கொடுத்திருக்க, அம்மையும் அப்பனும் திருமணக் கோலம் கொண்டிருக்க அவர்கள் திருக்கைகளை இணைத்து அழகர் நீர் வார்த்துத் தர அமைந்துள்ள இந்தச் சுதைவேலைப்பாடு இத்திருக்கோயிலுக்கு முன்னுரைதானே?" என்றான் பொன்னப்பன். "நீயே முன்னுரை என்னும்போது என்னுரை' வேறாக இருக்குமா?" என்று புன்முறுவல் பூத்தான் கண்ணப்பன்.

C

போக்குவரவு மிக்க நெருக்கடியான தெருவாக இருந்தாலும் கண்ணப்பன் விரைவாகக் கோயிலுக்குள் நுழைந்துவிடவில்லை. வீதியிலே நின்று உயரந் தாழ்ந்த அந்த விமானத்தின் சுதை வேலையையும் வண்ண வனப்பையும் கூர்ந்து கூர்ந்து பார்த்தான். 'ஓர் ஐயம்' என்றான்! "உனக்கு ஐயப்பாடு வரும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்! இன்னும் அன்னையின் திருமணக் காட்சிகள் பல, கோயிலுக்குள் உள்ளன. உனக்கு இப்பொழுது வரும் ஐயம், எனக்கு முன்னர் வந்தபோதே ஏற்பட்டது. பின்னே எனக்குத்