உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

37

களைபறிக்கும் போதும், பயன் கொள்ளும் போதும் தெய்வவுணர்வு அல்லவா முந்தி நிற்கும்?

பொன் : ஆம் அருமையான எண்ணம்தான். இவ் வில்வக்கன்று வளர்க்குமிடம் சிவந்தீசுவரர் கோயில் எனப்படும். சிவந்தீசர், செவ்வந்திவண்ணர், செந்தீவண்ணர் என்பவரெல்லாம், செம்மேனி அம்மானாம் சிவ பெருமானே ஆவார். அவருக்குச் செவ்வந்திப் பூவின் மேல் பற்று மிகுதி என்று இங்கே வளர்த்தனர். இப் பொழுது செவ்வந்திச் செடிகள் இல்லை. எனினும் வழிபாட்டுக்குப் பயன்படும் சில பூ வகைகள் உள்ளன. தேவாரப் பாடசாலையும் இங்கே நடைபெறுகின்றது இக் கோயில் முன்மண்டப முகப்பிலே வீரபத்திரர் எழில் தோற்றத்தைப் பார்த்தாயா? இத்தனை சிதைவு களுக்கும் இடையே வில்லேந்திய இந்த வீரன் மல்லேந்திய தோளாற்றல் வெளிப்பட எப்படி நிற்கின்றான்?

கண்

பூட்டிய கதவைத் திறந்து பொதுமக்கள் பார்வைக்கும் வழிபாட்டுக்கும் வகை செய்திருந்தால் இவ்விடத் திற்குப் பொலிவு உண்டாகி இருக்கும்! என்றைக் காவது ஒருநாள் இதற்கு நல்ல காலம் பிறக்கலாம்! நாம் வந்த வழியே திரும்புவோம்.