உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 318

அம்மை திருக்கோயில் வாயில் முன்னுள்ள இந்த ஆறுகால் மண்டபம் மிகப் புகழ் வாய்ந்தது. அப் புகழைச் சுட்டும் கல்வெட்டையும் ஓவியங்களையும் பார்த்தாயா? இந்த இடத்திலேதான் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், திருமலை மன்னர் முன்னிலையில் அரங்கேறியது.

ஆம்! அன்னை ஒரு செல்வியாக வந்து திருமலை மன்னர் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்துக் குமரகுருபரருக்குச் சூட்டிய செய்திதானே! அது நிகழ்ந்த இடம் இதுதானா?

பொன் : குமரகுருபரர்க்கு அருளிய கொழுந்தமிழ் அன்னை அங்கயற் கண்ணியை உள்ளார்ந்த அன்போடு அள்ளூறி வழிபடலாம். "வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" என்பது காதலுக்கு மட்டுமா உரியது? பத்திக்கும் உரிமை பூண்டதுதானே!

கண்

இங்கே தெற்கு மூலையில் மூத்தபிள்ளையாரும் வடக்கு க்கு மூலையில் இளையபிள்ளையாரும் அமர்ந் துள்ளனர். அவர்கள் ஒரு கும்பிடு போட்டுவிட்டு அம்மை முன்னே வருவோம்.

உலகெலாம் திருவிழியால் படைத்துக் காக்கும் அன்னையின் முன்னே நின்று,

வேண்டுகிறார் கேட்டாயா?

“கொண்டவர்கள் கொடுத்தவர்கள்

அண்டியவர்கள் அடுத்தவர்கள் எல்லா மக்களும்

நல்லா இருக்கணும்”

வ்வன்னை என்ன

தமிழ்த் தாய்க் குலத்திற்கு இந்த நெஞ்சவிரிவு கற்று வந்ததா? கற்பித்து வந்ததா? வழிவழியாக வந்து ஆட்சி கொள்ளும் வரப்பேறு இது. உலக நோக்கு, ஒருமைப்பாடு என மேடையில் கூச்சல் போடுகிறோம். கீழே இறங்கியதும் நிலைமையிலும் கீழே இறங்கி விடுகிறோம். இந்த அன்னை எவ்வளவு எளிமையாக இயல்பாகக் கூறிவிட்டார். இவர் வாழ்க! இவர் வேண்டுதல் வாழ்க!

பொன் : பசுங்கிளியைத் தாங்கி பைங்கிளியே, அன்னையே, எங்கள் வாக்கு உனக்கு இனிக்குமோ? இனிக்காதோ?