உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

பொன் : அங்கயற் கண்ணியை மணங்கொண்ட அண்ணல் சோமசுந்தரர்! ஆதலால், மணக்காட்சி அமைந்த

கண்

கண்

தூணிலேயே அவர் அரசு வீற்றிருக்கும் காட்சியையும் அமைத்தார்.

சரி! சரி! நன்றாகப் புரிகிறது. பரஞ்சோதியார், "அதிர்விடைக் கொடிஅங் கயற்கொடி யாக

அராக்கலன் பொற்கல னாகப்

பொதியவிழ் கடுக்கை வேம்பல ராகப்

புலியதள் பொலந்துகி லாக

மதிமுடி வைர மணிமுடி யாக

மறைகிடந் தலம்புமா மதுரைப்

பதியுறை சோம சுந்தரக் கடவுள்

பாண்டிய னாகிவீற் றிருந்தான்'

என்பதை விளக்கும் சிற்பம் இது.

பொன் : இதே தூணின் தென்பாகம் இருப்பவர் முப்புரம் எரித்தவர் (திரிபுராந்தகர்). தேரின்மேல் ஏறிக் கடு விரைவுடன் செல்கிறார்; கடுகடுப்பும் பளிச்சிடுகிறது. முப்புர அரக்கராகிய தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்பார் செருக்கை அழிக்க முனைந்தார் இறைவர்; ஆனால் தேவர்கள் தங்களால்தான் முப்புற அழிவு நிறைவேறுவதாக எண்ணிச் செருக்கினார்; செருக்கை அழிக்க வந்தவர்க்குச் செருக்கு வேண்டுமா? சிரிப்பால் இருவகைச் செருக்கையும் அழிக்க நினைத்தார்; சிரித்தார்; நெற்றிக் கண்ணால் முப்புரத் தாரை எரித்தார்; தேவர்கள் செருக்கை ஒடுக்கினார்; இந்தக் காட்சியில் முப்புரத்தாரைக் காணவில்லையே! பொன் : போருக்குப் புறப்படும் காட்சி இது!இங்கேயே : முப்புர அரக்கரைக் காட்டல் தகுமா? எதிர்த்தூணில்

கண்

பார்; முப்புர அரக்கரும் உள்ளனர்; எட்ட இருந்து எரித்ததை இப்படிக் காட்டத் திட்டமிட்டது சரிதானே!

மிகச் சரி!

"வெள்ளி இரும்பு பொன்னெனப் பெற்ற

மூன்றுபுரம் வேவத் திருநகை விளையாட்டு ஒருநாள் கண்ட பெருமான் இறைவன்"