உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

69

இவ்விணைப்பு மிகப் பொருத்தமானது. 'உமையொரு பாகன்' இறைவன் என்பது மிகப் பழமையான செய்தி. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று" என்பது பெருந் தேவனார் வாக்கு.

பொன் : உமையொரு பாகனாம் இச் சிற்பத்தில் இடப்பாதி உமைக்கும் வலப்பாதி இறைவனுக்கும் உள்ளது. அவ்வப் பகுதிக்குத் தக்க உடலமைப்பு, உடை, அணிகலம், தன்மை ஆகியன இடம் பெற்றுள்ளன. திருவிழிகளை உற்றுப்பார். ஒன்றுபோல் ஒன்று உள்ளதா?

கண்

வலக் கண்ணில் தோன்றுவது வெம்மை; இடக் கண்ணில் தோன்றுவது தண்மை. ஆண்மையின் வெம்மையும், பெண்மையின் தண்மையும் ஒப்ப விளங்கி உய்விக்கும் தோற்றம் இது. வாழ்க்கைத் துணையின் இலக்கணத்தை வகுத்துக் காட்டும் தனிப்பெரு கலைப்படைப்பு இஃது என்று களிப் புறலாம்.

ஒரு

பொன் : சங்கர நாராயணர் தோற்றத்தைச், "சடைமுடி பிறைநிலா இவற்றை அணிந்த தலையின் பகுதியர்; முக்கண்ணர்; புலித்தோலும் பொன்னா டையும் உடுத்தவர்; நெருப்பும் ஆழியும் ஓடும் சங்கும் கொண்டவர்; வெண்மையும் கருமையுமாம் இரு நிறத்தார்; சிவனுக்கும் திருமாலுக்கும் உரிய அணிகள் அணிந்தவர்; இவர் சங்கர நாராயணர்” என்று சிற்ப ரத்தினம் என்னும் நூல் கூறுகிறது.

கண்

சங்கரனும்

நாராயணனும் இணைந்த இவ் வருமையைப் பெருமையாகக் காட்டும் திருக்கோயில் சங்கர நாராயணர் கோயில் என்பது நாம் அறிந்தது தானே! உமை இருக்கும் இடத்திலே நாராயணர் உள்ளார். "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாற னார்க்கே" என்ற அப்பரடிகளே, "மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாகமாகி" என்றும் விளக்கினார். இறைவன் உமையொரு பாகனாகவும் சங்கர நாராயணன் ஆகவும் ஆனது ஏன் என்று சொல்ல வேண்டாவா?