உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

71

பொன் : தென்முகக் கடவுளை அறமுரைக்கும் பெருமான், வீணைப் பெருமான், ஞானப் பெருமான், யோகப் பெருமான் என நான்காகச் சிற்ப ரத்தினம், காசியப் சிற்ப சாத்திரம் முதலிய நூல்கள் கூறும். இவர் யோகப் பெருமான் ஆவர்.

கண் : மூக்கின் நுனியை இவர் நோக்கிக் கொண்டிருப்பதை உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தால் தவநெறி தானே கைகூடும்போல் உள்ளது.

பொன் : சிற்பி இதனை விட்டாரா! யோகப் பெருமான் காலடியிலே உட்கார்ந்து விட்டானே ஒருவன். தொட்டுக் காட்டிய வித்தை துலங்கினால் தானே பயன்! இந்த ஏழாம் தூணின் வடபக்கம் பார். இவர் கரியுரி போர்த்தவர் (கச சம்மாரர்). இவர் எண்கை ஏந்தலாக விளங்குகிறார்.

கண் :

"விரித்தபல் கதிர்கொள் சூலம்

வெடிபடு தமருகங்கை

தரித்ததோர் கோல பயிரவ

னாகி வேழம் உரித்து'

என்னும் தேவாரப்பாட்டை நேரே காட்டுகிறது இது. ஆனைத்தோல் அடிதொட்டு முடிவரை உயர்ந்து, கைப் பக்கமெல்லாம் விரிந்து, நீள்வட்ட மாணிக்கத் தட்டில் நிறுத்தி வைத்த பெருமானாகக் காட்டுகிறது இச் சிற்பம்.

பொன் : பெருமான் ஊன்றிய இடக்காலின் கீழே யானையின் தலை; தூக்கிய கைகளின் மேலே யானையின் வால்; திருச்சடையே சீரிய காட்சி; காதணியோ மிக அருமை. தூக்கிய வலக்கால் கூத்தரசர் இவர் என்பதைக் காட்டும். இடையின் ஒருபக்க நெளியும் ஒருபக்க இழுப்பான வளைவும் இயற்கைப் படைப்பே!

கண்

புலித்தோல் உடுத்தவர்க்கு யானைத் தோல் போர்த் தற்கு ஏன் ஆவல் உண்டாயிற்று?

பொன் : கயாசுரன் என்பவன் மண்ணவர் விண்ணவர் ஆகிய அனைவரையும் வருத்தினான். அவன் யானை முகத்தையுடைவன். அவனைச் சிவன் உதைத்துத் தள்ளினார். தோலை உரித்துக் குருதி சொட்டச்