உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31 ஓ

சொட்டப் போர்த்துக் கொண்டார். இதுவே இறைவன் கரியுரி போர்த்த கதையாகும்.

'தோலை உரித்துத் தொங்கப் போடுவேன்' என்பது எளிதாக இருக்கலாம். ஆட்டுத் தோலையும் மான் தோலையும் இன்னபிறவற்றையும் எளிதாக உரிக்க லாம் என்பர். ஆனால் யானைத் தோலை உரித்தல் மிக அருமையாம். இவர் அதனை உரித்தெடுத்து விரித்துப் பிடித்து அரங்கப் பின்னணியாக ஆக்கிக் கொண்டு ஆட்டமே ஆடுகிறார்! இதற்கு ஏற்றவாறு கல்லைத் தேர்ந்தெடுத்துக் கலைத்திறம் காட்டியிருக் கிறான் சிற்பச் செல்வன்.

பொன் : இத் தூணின் தெற்குப்பக்கத்தில் சண்டேசுவரருக்கு (சண்டேஸ்வர

கண்

அருளினோர்

அனுக்கிரகர்) உள்ளார். சோழ நாட்டுச் சேய்ஞலூரைச் சேர்ந்தவர் சண்டீசர். அவர் இயற்பெயர் விசார சருமர். அவர் கலைத்திறம் செறிந்தவர். அவ்வூர் ஆயன், ஆக்களை, மேய்க்கச் சென்றவன், அவற்றை அடித்ததைக் கண்டு, தாமே ஆக்களை மேய்த்த அருளாளர். அவர் மேய்ப் பால் ஆக்கள் பால் மிகுதியாகச் சொரிந்தன. அப்பாலை மணலால் சிவலிங்கம் ஒன்று செய்து அதற்குப் பொழிந்து பூசை செய்தார். 'பாலைப் பாழாக்குகிறார்' என ஊர்ப் பேச்சு எழுந்தது. சண்டீசரின் தந்தையார் ஒருநாள் மறைந்திருந்து பார்த்தார். வெகுண்டார்; பூசையை அழித்தார். சண்டீசர் ஒரு கோலைக்கொண்டு தந்தையின் காலை ஒடித்து வீழ்த்தினார். இறைவன் காட்சி வழங்கிச் சண்டீச பதவி வழங்கினார். அதனை விளக்கும் காட்சி இது

பெரிய புராணத்தில் வரும் சண்டேசுர நாயனார் கதை தானே!

பொன் : ஆம்! இறைவனின் நின்ற திருவடி போலவே சண்டீசரை அமைத்து அவன் திருவடியைத் தொட்டு வணங்கவும், இறைவன், சண்டீசரின் தலையில் மாலைசூட்டி அருள்பாலிக்கவும் விளங்கும் இவ் வமைப்பு முறை மிக அழகியதாம்.

கண் : “மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த