உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்(கு)

அடியேன்”

73

பொன் : இந்தக் கடைசித் தூணைப் பார். மேற்கே, வடக்குப் பார்த்துப் பிச்சைப் பெருமான் உள்ளார். முன்னர் இவர்க்குத் தனி மண்டபமே இருந்ததைக் கண்டோம். இங்கும் இவர் பொலிவாகவே விளங்குகிறார். உச்சி மேல் கலம் கொண்ட 'குண்டைப்பூதம்' அழகாக விளங்குகிறது. இறைவனின் எடுத்து வைக்கும் திருவடி அருமையாக அமைந்துள்ளது. கையில் பிடித்த சூலம் பிடர்க்குப் பின்னே சென்று வெளிப்பட்டு விளங்குவது பேரழகு! இன்னும் பிச்சைப் பெருமான் பலரைக் காண்போம். அவர்களும் நம்மைக் களிப்புறச் செய்வர். : கூத்தப் பெருமான் கையில் ஏறிவிளையாடும் மான், பிச்சைப் பெருமானின் திருவடிக்கீழே நின்று எழுப்பி அறுகுண்ணும் காட்சியும் கண்டு களிக்கத்தக்கதே.

கண்

காமனை எரித்தவர் (காமாந்தகர்)