உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

133

நீளம், அகலம், படிக்கட்டு அமைப்பு, நடைபாதை சுவரோவியம், திருக்கோபுரப் பின்னணி, நீராடி வழிபாடு செய்வார் நேர்த்தி ஆகியவை ஒன்றற்கு ஒன்று அழகு சேர்ப்பதாய்த் திகழ்கின்றது பொற்றாமரைக் குளம்.

தெப்பக்குள நடைமண்டபத்தின் வடக்கு கிழக்குச் சுவர்களில் எல்லாம் திருவிளையாடல் ஓவியங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் திருக்குறள், சிவஞானபோதம், அபிராமி அந்தாதி,மதுரைத் தேவாரப் பதிகங்கள் ஆகியவை சலவைக் கல்லில் தீட்டிப் பதிக்கப் பட்டுள்ளன. இத்திருப்பணி செய்தவர் திருப்பனந்தாள் திருமடத்துத் தலைவர் அருள்நந்தித் தம்பிரான் ஆவர்.

49.5 மீட்டர் நீளமும் 36 மீட்டர் அகலமும் உள்ள இப் பொற்றாமரைக் குளம் ‘சங்கப்பலகை' இருந்த இடம் என்பது புராணம். மண்டபத் தூண்களில் ஏடு எழுத்தாணிகளுடன் இருப்பவர்கள் புலவர்கள்!

சிவந்தீசுவரர் கோயில் :

பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்குப் பகுதிக்கு மேற்கில் சிவந்தீசுவரர் கோயில் இருக்கிறது. அங்கே பூந் தோட்டம் உள்ளது. தேவாரப் பாடசாலையும் நடைபெறுகிறது. ஊஞ்சல் மண்டபம் :

சிவந்தீசுவரர் கோயிலுக்கும் பொற்றாமரைக் குளத்திற்கும் இடையே அமைந்த நடைமண்டபம் தெற்குக் கோபுர வாயிலுக்கு நேரே உள்ளது. இந்நடைமண்டபத்தில் ஆறு தூண்களைக் கொண்ட அழகான கருங்கல் மண்டபம் ஒன்றுள்ளது. அதற்கு ஊஞ்சல் மண்டபம் என்பது பெயர். அதற்கு முன்னே, தெப்பக் குளத்தின் உள்ளே நீண்டு செல்லும் மண்டபம் ஆடல் மண்டபம் வெள்ளிதோறும் இறைவன் இறைவியர் ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி அங்கு நிகழ்கின்றது. மன்னராட்சி நாளில் ஊ ஊஞ்சல் நிகழ்ச்சியின்போது ஆடல் மண்டபத்தில் ஆடல் நிகழ்ந்ததும்

உண்டு.

ஊஞ்சல் மண்டபம் இருக்கும் நடைவழி மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறியவை; ஆனால் அரியவை உச்சித் தலை மேல் கை வைத்துக் கும்பிடுபவர்; நெஞ்சுக்கு நேரே கைதூக்கி வணங்குபவர்; வலக் காலைத் தூக்கி மடித்து நின்று வணங்குபவர்; சடைத் தலையராய் வணங்குபவர்; மொட்டைத்