உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

மதுரை, கோயில் மாநகர் என்றால், கோயிலோ கோபுரக் கோயிலாக அல்லவா திகழ்கின்றது.

மதுரைக் கோயில் நீளம் 2541 மீட்டர், அகலம் 237.6

மீட்டர்.

புதுமண்டபம் :

சொக்கர் கோயிலுக்கு முன்னே தனித்து இருக்கும் பெருமண்டபம் புதுமண்டபம் - நாயக்கமன்னர் கலைவண்ணச் சிறப்பைத் தனியே நின்று நிலைவண்ணமாக்கும் நீராழி மண்டபமாகத் திகழ்ந்தது அது. புறச் சூழல் எல்லாம் கடைகளாக மாறினாலும், அகச்சூழல் போற்றப்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரியதே.

புதுமண்டபத்தின் புகுவாயில் சித்திரை வீதியில் உள்ளது. அதற்கு முன்னே இராசகோபுரம் அரை குறையாக நிற்கிறது. திருமலை மன்னரால் தொடங்கப்பட்ட அப்பணி அவர் மறைவால் நின்று விட்டது. அதன் அடித்தளத்தைப் பார்த்தாலே கோபுரங்களுக்கெல்லாம் இரா ராசகோபுரம் என்பது விளங்குகின்றது.

புதுமண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள குதிரைவீரன் சிற்பமே கொள்ளை கொள்கிறது. உள்ளே திருவிளையாடற் சிற்பங்கள் உயிர்வடிவாக உவகை பெருக்குகின்றன. ஏகபாத மூர்த்தி (ஓரடிப்பெருமான்) காளி, உருத்திர தாண்டவர் காரைக்கால் அம்மையார், பிச்சைப்பெருமான், உமையொரு பாகர், மீனாட்சி திருமணம், கயிலையை இராவணன் எடுக்கும் காட்சி, கருங்கல் மண்டபம் (வசந்த மண்டபம்), நாயக்க மன்னர்கள் திருவுருவம் ஆகியவை காணக் காணக் களிப்பூட்டு கின்றன.

மண்டபத்தின் நான்குமூலைத் தூண்களிலும் ஓடத்துடிக்கும் குதிரைச் சிற்பங்கள், இம்மண்டபத்தைத் தேராக்கி ஓட்டக் கற்பனை செய்திருக்கிறான் சிற்பக்கோமான்.

இம்மண்டபத்தின் நீளம் 100 மீட்டர். அகலம் 31.5 மீட்டர், உயரம் 7.5 மீட்டர். இதிலுள்ள தூண்கள் 124 இம்மண்டபத்திற்குத் தெற்கில் அம்மன் கோயில் முன்னே இருப்பது நகரா மண்டபம். கோயில் வழிபாட்டுக்குப் பேரிசை முழக்கப்பட்ட மண்டபம்

நகராமண்டபமாம்.