உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

வேடுவன் இருக்கக் கண்டான். அவனே தன் மனைவியைக் கொன்றான் என்று தீர்மானித்து அவனை அரசன் ஆணையிட்டு அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்தான். அந்நாள் அரசனாகிய குலோத்துங்க பாண்டியனிடம் நிகழ்ந்ததைக் கூறினான். வேடனோ தனக்கு எதுவும் தெரியாது என் று சாதித்தான். அவனைக் காவலில் வைத்துவிட்டு அரசன் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு நல்வழி காட்ட வேண்டுமென்று வேண்டினான். இறைவன் "வணிகர் தெருவில் நிகழும் திருமணத்திற்கு அவ் வந்தணனுடன் சென்றால் உண்மை விளங்கும்" என்று உருவிலி ஒலியாய்க் கூறினான்.

பாண்டியன் அந்தணனை அழைத்துக் கொண்டு மண வீட்டைச் சேர்ந்தான். இவர்களுக்குக் கேட்குமாறு எமதூதருள் ஒருவன் "இம் மணமகனுக்கு ஏதொரு நோயும் இல்லையாகவும் எப்படி உயிரைப் பறிப்பது?" என்று வினாவ, மற்றொருவன்" ஆலமரத்தில் தங்கியிருந்த அம்பைக் காற்றால் வீழ்த்தி மறையாட்டியைக் கொன்றது போல் ஒருவழியால் கொல்வோம்" என்று மறுமொழி கூறினான்.

திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மங்கல ஒலி கேட்ட பசு ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவந்து மணமகனை முட்டிக் கொன்றது. இதனைக் கண்ட பாண்டியன் உண்மை உணர்ந்து அந்தணனுக்கு வேண்டும் பொருள் தந்து சிறையில் இருந்த வேடனை விடுவித்துப் பொறுத்துதவுமாறு வேண்டிக் கொண்டான். நல்வழி காட்டிய இறைவனை வணங்கினான். 26. மாபாதகம் தீர்த்தது

அவந்தி நகரில் ஒரு மறையோன் இருந்தான். அவன் மனைவி பேரழகி. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெரும்பாவி.தன்னைப் பெற்றவளையும் இச்சித்தான். அத் தீயவளும் அதற்கு இசைந்தாள். இதனைத் தந்தையும் அறிந்து கொண்டான். அதனால் அப் பாவிமகன் தந்தையை மண் வெட்டியால் வெட்டிக் கொன்றான். பின்னர்ப் பெற்றவளை அழைத்துக் கொண்டு இருந்த பொருள்களையும் எடுத்துக் கொண்டு ஒரு காட்டு வழியே புறப்பட்டான்.

செல்லும் வழியில் வேடர்கள் தடுத்துப் பொருளைப் பறித்துக் கொண்டு அத்தாயையும் கவர்ந்து கொண்டு சென்றனர். அந்நிலையில் அப் பாவிமகனை, இறந்த தந்தையின் ஆவி பற்றிக் கொண்டு அலைக்க, அலைந்து திரிந்து மதுரைக்கு வந்தான்.