216
31 ஓ
இளங்குமரனார் தமிழ்வளம் - 31
ஒப்பிட்டு ஆராய்ந்து பதிப்பித்தலும் ஆகிய பணிகள் தொன்னூலாராய்ச்சிப் பிரிவினரால் மேற்கொள்ளப் பெற்றன. இப்பணிக்காகத் தமிழறிஞர் பலர் இந்நாட்டுச் சிற்றூர் பேரூர்களுக்கெல்லாம் சுற்றியலைந்து சுவடி தொகுத்தலில் ஊன்றினர்.சே.ரா.சுப்பிரமணியக்கவிராயர், சே. ரா. அருணாசலக்கவிராயர், சே. ரா. கந்தசாமிக் கவிராயர் என்பார் நூலாய்விலும் நூற்பதிப்பிலும் பெரும் பணி செய்தவர்கள் ஆவர்.
செந்தமிழ் என்னும் திங்களிதழ் சங்கம் தொடங்கிய போழ்தே தொடங்கிற்றில்லை. சங்கம் தனக்கென ஓர் அச்சகத்தைத் தோற்றுவித்த பின்னரே தொடங்க வாய்ப்பாக இருந்தது.
"தமிழின் செம்மையினையே உலகிற்கு நன்கு அறிவுறுத் தலானும், செந்தமிழ் வளர்ச்சியே செய்தலானும், செவ்விதாய தமிழானே நடத்தலானும், செந்தமிழ் நாட்டுத் தலைநகர்க் கண்ணே தோற்றமுடைத் தாகலானும் செந்தமிழ் எனப் பெயர் பெற்று விளங்கியது" என்பதைச் செந்தமிழ் முதலிதழ் முகவுரை குறிக்கின்றது. அது வெளிவந்தது சுபகிருது ஆண்டு கார்த்திகைத் திங்கள் ஆகும். இது, கி.பி. 1903 ஆம் ஆண்டு.
செந்தமிழில் வெளிப்படும் செய்திகள் வை என்பதும் முதல் இதழிலேயே வரையறுக்கப் பெற்றுள:
66
"இது காறும் அச்சிடப்படாத செந்தமிழ் நூல்களும் தமிழ் நாட்டுப் புராதன சரிதங்களும், சாசனங்களும், வட மொழியினும் ஆங்கிலத்தினும் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூல் மொழிபெயர்ப்புகளும், தமிழின் அருமை பெருமை அடங்கிய விசயங்களும், தமிழாராய்ச்சியைப் பற்றியனவும், தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் இதன் வாயிலாக வெளிவரும்.
கல்விக்கழகம், கலாசாலைத் தமிழ்த் தேர்வுகள், நூல் வெளியீடு, செந்தமிழ் ஆகியவற்றைப் பற்றிய விரிவான செய்திகள் மேலே தனித்தனி விளக்கப்பெறும். இவண், தமிழ்ச் சங்கம் தோன்றிய நாண்ளில் மதுரை மக்கள் நிலை எவ்வாறு இருந்தது என்பதைக் காணபோம்.
மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்து பேரார்வத்துடன் பணிசெய்ய முன்வந்த புலவர்கள் பலர். அவர்கள் சோழவந்தான் அரசஞ் சண்முகனார், விளாச்சேரி சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமாற்கலைஞர், சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர், சே.